தன் வாழ்வில் எதிர்கொண்ட சில மனிதர்களை, சில சம்பவங்களை சொல்லி, அதன் மூலம் தான் என்ன கற்றுக்கொண்டேன், என்ன உணர்ந்தேன், சமூகம் எப்படியிருக்கிறது என்பதை எளிமையாக சொல்லி செல்கிறார் மம்முட்டி.
January 24, 2023
மூன்றாம்பிறை - நடிகர் மம்முட்டியின் வாழ்க்கை அனுபவங்கள்
தன் வாழ்வில் எதிர்கொண்ட சில மனிதர்களை, சில சம்பவங்களை சொல்லி, அதன் மூலம் தான் என்ன கற்றுக்கொண்டேன், என்ன உணர்ந்தேன், சமூகம் எப்படியிருக்கிறது என்பதை எளிமையாக சொல்லி செல்கிறார் மம்முட்டி.
கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை
இப்பொழுதுள்ள பெரும்பாலான குழந்தைகள் கழுதைகளை பார்த்திருக்க வாய்ப்பேயில்லை! குதிரையின் இனங்களில் ஒன்றாக கழுதை இருக்கிறது. வெப்ப மண்டல பகுதிகளில் வாழ்கின்றன. சுமை தூக்குவதற்கு பயன்படுவதால்… மனிதர்களின் வாழ்வில் பல ஆண்டு காலம் உடன் பயணித்திருக்கிறது.
January 18, 2023
கனவு வெளிப் பயணம் – கவிஞர் சல்மா
பத்து நாடுகள் பயணித்ததில்.. முதல் அனுபவமாக பாகிஸ்தான் அனுபவத்தை பகிர்ந்துள்ளார். அதில் கல்வி, நிர்வாகம், சமூகம் என பல்வேறு விசயங்களை பகிர்ந்துள்ளார். அதில் குறிப்பிடத்தக்க அம்சங்களை மட்டும் பகிர்கிறேன்.
January 16, 2023
சாக்ரடீசுக்கு விஷம் கொடுத்தது ஏன்?
நிலவுகிற அரசுக்கு எதிராக கேள்விகள் எழுப்பியதற்காக சாக்ரடீசுக்கு மரண தண்டனை அறிவிக்கப்படுகிறது.
January 15, 2023
தாய் நாவல் - விலை ரூ. 150 மட்டுமே!
சில
ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் புத்தகத்தை படிக்க ஆரம்பித்து… மூன்று நாட்களில் படித்து
முடித்தது இன்றும் நினைவில் இருக்கிறது.
இந்த
நாவல் இரண்டு பாகங்கள் உடையது. நாவலின்
578 பக்கங்களில், முதல் பாகம் 273 பக்கங்கள் கொண்டது. மீதி இரண்டாம் பகுதிக்கானவை.
தொழிலாளர்களும்,
விவசாயிகளும் இணைந்து சமுக மாற்றத்தில் செயலாற்றவேண்டும் என்ற அடிப்படையில்… தொழிலாளர்களின்
துயர வாழ்க்கை, தொழிலாளர்களை அமைப்பாக்குவது குறித்து முதல் பாகத்திலும், விவசாயிகளின்
வாழ்க்கை, விவசாயிகளை அமைப்பாக்குவது குறித்து இரண்டாம் பாகத்திலும் அருமையாக எழுதியிருப்பார்
கார்க்கி.
தாய்
நாவல் தொ.மு.சி. ரகுநாதன் மொழிபெயர்ப்பு சிறப்பானது. கலைஞர் கருணாநிதி நாவலின் உள்ளடக்கதில் ஈர்க்கப்பட்டு,
அவருடைய கைவண்ணத்தில் மொழிபெயர்ப்பு செய்தார்.
இப்பொழுது
இந்த பதிவு குறிப்பாக எதற்கு என்றால்…. பொதுவாக இந்த நாவலை சில பதிப்பகங்கள் கொண்டு
வந்திருக்கிறார்கள். விலை ரூ. 350, ரூ. 400 என விற்கிறார்கள். நேற்று புத்தக திருவிழாவில் கடை எண் : 158ல் தாய் நாவலை கெட்டி அட்டையில் தரமான வடிவத்தில் ரூ.
150க்கு பார்த்ததும் பெரிய ஆச்சர்யம். திருமணத்தில்
புத்தகங்களை பரிசாக கொடுக்கும் வழக்கம் இருப்பதால், ஐந்து புத்தகங்கள் வாங்கிக்கொண்டேன்.
எப்படி
உங்களால் இவ்வளவு குறைவாய் கொண்டு வரமுடிகிறது என கேட்டதற்கு… ஸ்டாலில் இருந்த தோழர்
இதற்கான விளக்கம் தந்தார்.
”நாங்கள்
பதிப்பகத்தை தொழில் முறையில் நடத்துகிறவர்கள் இல்லை. ”சீர் வாசகர் வட்டம்” என்ற பெயரில் தொடர்ந்து நடத்தி
வருகிறோம். புத்தகங்களை கூட்டாக படிக்கிறோம்.
விவாதிக்கிறோம். அதன் வழியாக சிறந்த புத்தகங்களை
தேர்வு செய்கிறோம். சமூக அக்கறை கொண்டவர்களிடம்
நன்கொடைகள் பெறுகிறோம். தமிழ்நாட்டில் எல்லா
பகுதிகளில் இருந்தும் 119 நன்கொடையாளர்கள் இதற்காக உதவியிருக்கிறார்கள். இந்த புத்தகத்தின்
இறுதி பக்கங்களில் உதவியர்களின் பட்டியலை வெளியிட்டிருக்கிறோம்.
நாங்கள்
இதை ஒரு இயக்கமாக கொண்டு செல்கிறோம். ஆகையால் இதன் பதிப்பில், விற்பனையில் ஈடுபடும்
எங்கள் தோழர்கள் சம்பளம் என எதையும் பெற்றுக்கொள்வதில்லை. இப்படி குறைவான விலைக்கு
கொண்டு வருவதால், சில ஆயிரம் புத்தகங்கள் குறிப்பிட்ட காலத்திற்குள்ளேயே விரைவாக விற்பது
நடக்கிறது. இப்படி ஒரே நேரத்தில் சில ஆயிரம் புத்தகங்கள் பதிப்பதால் புத்தகத்தின் அடக்க
விலை நிறைய குறைகிறது.
கடந்த
காலங்களில் தந்தை பெரியாரின் ”பெண் ஏன் அடிமையானாள்?” என்ற புத்தகத்தை மலிவு பதிப்பாக
கொண்டு வந்தோம். இதுவரை 4 லட்சம் பிரதிகள்
விற்றிருக்கிறோம். கடந்த ஆண்டு புதுமைப்பித்தன் சிறுகதைகளை தொகுப்பாக மலிவு பதிப்பாக
கொண்டு வந்தோம். அதன் தொடர்ச்சியில் இந்த ஆண்டு
மார்க்சிம் கார்க்கியின் ”தாய்” நாவலை கொண்டு வந்திருக்கிறோம்” என்றார்.
”நல்ல
காரியத்தை செய்கிறீர்கள். தொடர்ந்து உற்சாகமாய் செயல்படுங்கள்” என வாழ்த்துகளை தெரிவித்து
விடைபெற்றோம்.
புத்தக கண்காட்சிக்கு செல்பவர்கள் கடை எண் 158ல் வாங்குங்கள். போக
வாய்ப்பில்லாதவர்கள் கீழ்க்கண்ட எண்களுக்கு தொடர்புகொள்ளுங்கள்.
9566331195, 9600652285, 9865252105.
ஆசிரியர்
: மாக்சிம் கார்க்கி
தமிழில்
: தொ.மு.சி. ரகுநாதன்
பக்கங்கள்
: 578
விலை
: ரூ. 150
January 14, 2023
Saudi Vellakka (2022) மலையாளம்
"உலகம் இரண்டாக இயங்குகிறது. நீதிமன்றங்களும் கூட விதிவிலக்கில்லை. அரசியல், அதிகாரம், பண பலம் படைத்தவர்கள்தான் நீதிமன்றத்தின் நேரத்தை பெரும்பாலும் ஆக்கிரமித்துக்கொள்கிறார்கள்" - இதையும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிதான் வருத்தப்பட்டுச் சொன்னார்.
January 9, 2023
கட்டா குஸ்தி (2022)
கேரள பாலக்காட்டில் கட்டா குஸ்தியில் தேர்ந்த ஆளாக இருக்கிறார் நாயகி. அவளுக்கு திருமண ஏற்பாடு இதனாலேயே தள்ளி தள்ளி போகிறது. பெண் பார்க்க வந்த ஒரு அம்மா சொல்லும்… “உன்னை மட்டும் தூக்கி போட்டு மிதிக்க மாட்டாடா! என்னையும் உதைப்பா!”. இதனாலேயே வருத்தப்பட்டு அப்பா நோய்வாய்படுகிறார்.
உதிர்ந்த 2022யும் புதிதாய் முளைத்திருக்கும் 2023யும்!
பலரும் பழைய ஆண்டு குறித்தும், புதிய ஆண்டு குறித்தும் நிறைய எழுதிவிட்டர்கள். வாழ்த்துகளை பகிர்ந்துகொண்டார்கள். வேலை நெருக்கடிகளில்…எட்டு தேதி ஆன பின்பு தான் அசை போட நேரமும், மனநிலையும் வாய்த்திருக்கிறது.
வாசிப்பை நேசிப்போம் விழா! வாசிப்பவர்களை உற்சாகப்படுத்தும் விழா!
Ini Utharam (Now Answer) (2022) மலையாளம்
நாயகி ஒரு மருத்துவர். கேரளாவின் பாலக்காட்டில் தனியாக போலீஸ் ஸ்டேசன் வந்து, தன்னிடம் ஒருவன் தப்பாக நடந்துகொண்டதாகவும், அவனை கொலை செய்துவிட்டதாகவும், அருகில் உள்ள காட்டுப்பகுதியில் புதைத்துள்ளதாகவும் வந்து புகார் தருகிறார். அதே சமயத்தில் பல ஊடகங்களும் வந்து சேர, பரபரவென தீப்பிடித்த மாதிரி விசயம் சூடு பிடிக்கிறது. மக்கள் மத்தியிலும் பேசு பொருளாகிறது.
ஜே. கே காப்பியரும் போலீசும்!
ஒரு தொழிற்சாலை. தொழிற்சாலைக்கு உள்ளேயே தொழிலாளர்கள் தங்குவதற்கான குடியிருப்பு. ஜார்கண்டை சேர்ந்த நடுத்தர வயது தொழிலாளி ஒருவருக்கு உடல்நலமில்லை. மயங்கிவிழுந்துவிட்டார்.