November 2, 2009
"மாநிலத்தை விட்டு வெளியேறுங்கள்!" தில்லி அரசு!
'ராஜ்தாக்கரேயின் வழியில் பிச்சைகாரர்களை வெளியேற சொல்வது விசித்திரமாக உள்ளது'
- தில்லி உயர்நீதி மன்றம் கண்டிப்பு.
தலைநகர் தில்லியில் காமன்வெல்த் போட்டிகள் ஜனவரி 2010-ல் துவங்க இருக்கின்றன. இதில் பங்கெடுக்க, பார்க்க-என வெளிநாட்டினர் லட்சகணக்கில் வருகை தருவார்கள். இவ்வேளையில், ஏற்கனவே தலைநகரில் கூட்டம் கூட்டமாய் வாழும் 65000 இந்திய பிச்சைகாரர்கள்
வெளிநாட்டினரை தொல்லை படுத்தி, 'வல்லரசு' இந்தியாவின் 'கெத்'-ஐ நாசப்படுத்திவிடுவார்கள் என முடிவெடுத்து, எல்லா பிச்சைகாரர்களையும் சிறையில் தள்ள முயன்றது. (பார்க்க முந்தைய பதிவு : காமென்வெல்த் போட்டியும் இந்திய பிச்சைகாரர்களும்!)
அரசு அத்தனை பிச்சைகாரர்களுக்கும் சிறை பற்றாது என நினைத்ததா! அல்லது இவர்களுக்கு எதற்கு சில மாதங்கள் சோறு போடவேண்டும் என நினைத்ததா தெரியவில்லை. இறுதியில், "தில்லியை விட்டு வெளியேறுங்கள்! அவரவர் மாநிலத்திற்கு போய்விடுங்கள்" என உத்தரவிட்டது. இதை எதிர்த்து ஒருவர் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார்.
நேற்று இந்த வழக்கில் தில்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது.
"பிச்சை எடுப்பது ஒன்றும் கிரிமினல் குற்றம் அல்ல! அரசு அவர்களுக்கு ஏதாவது வாழ்வாதாரத்துக்கு வழி செய்து இருக்கலாம். அதை விட்டு, அவரவர் மாநிலத்துக்கு போகும்படி உத்தரவிடுவது நியாயமில்லை.
மகாராஷ்டிராவில் ராஜ்தாக்கரேயின் நவநிர்மாண் கட்சி அங்கு குடியேறியுள்ள உ.பி., பீகார் மாநிலத்தவரை வெளியேற சொல்வதை போல தில்லி அரசின் இந்த உத்திரவு அமைந்துள்ளது. உள்ளுக்குள் கிரிமினல்களை வைத்துக்கொண்டு பரிதாப நிலையில் பிச்சை எடுப்பவர்களை வெளியேற சொல்வது விசித்திரமாக உள்ளது.
இந்த உத்தரவிற்காக அரசை கண்டனம் செய்கிறோம்."
Subscribe to:
Post Comments (Atom)
3 பின்னூட்டங்கள்:
மாற்று ஏற்பாடு செய்தாலும் திருந்த மாட்டார்கள்..சோம்பேறிகளாக இருப்பார்கள்...
அமுதா கிருஷ்ணா,
இந்த நாட்டில் பிச்சைகாரர்கள் எல்லாம் வானத்தில் இருந்து குதித்தவர்கள் அல்ல! பிச்சைகாரர்களில் பெரும்பான்மையோர் அரசின் தவறான பொருளாதார கொள்கைகளின் விளைவாக உருவானவர்கள் தான்.
நேற்றுவரை கூலி விவசாயியாக, கூடை பின்னுவராக, சிறு வியாபாரிகளாக இருந்தவர்கள் தான் இன்றைக்கு உருவானவர்கள்.
முதலில், அரசு என்ன முயற்சிகள் எடுத்தது என சொல்லுங்கள்!
'வல்லரசு இந்தியா' என சொன்னால் மட்டும் பற்றாது! சொந்த மக்கள் லட்சகணக்கில் பிச்சைகாரர்களாக அலைவதை முதலில் தடுக்க வேண்டும்
அமுதா கிருஷ்ணா அவர்களே,
ஆமா ஆமா....இந்த வல்லரசில் தான், தன் குழந்தைக்கு உணவளிக்க முடியாத சூழ்நிலையில் பட்டினிசாவுகள் அதிகம். இத்தகய சூழலில் தன் சொந்த மண்ணை விட்டு வெளியேறி பல வகையான சிக்கல்களுக்கு ஆளாகும் மக்கள்தான் இவர்கள்.
ஓட்டுக்காக இவர்களின் காலில் விழும் அரசியல்வாதிகள் தான் இப்போது இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர்.
நாமும் இந்த அரசியல்வாதிகளைப் போல சிந்திப்பது அபத்தமானது.
Post a Comment