> குருத்து: ஏதாச்சும் செய்யனும் பாஸ்!

April 20, 2011

ஏதாச்சும் செய்யனும் பாஸ்!

புதுசா இது யார்றா கிளம்பி இருப்பது? என என்னைப் பார்க்கிறது புரியுது. நமக்கு எல்லாம் அவ்வளவு தெளிவு பத்தாது பாஸ்.

இருப்பதை வைத்துக்கொண்டு, கூழோ, கஞ்சியோ, கையேந்தி பவன்ல குடிச்சுட்டு காலத்தை ஓட்டுகிற ஆள் பாஸ். யாரிடமாவது கடன் வாங்கனும்னு நினைச்சாலே, காய்ச்சல் வந்திரும் பாஸ். அப்படியே வாங்கிட்டா குடுக்குற வரைக்கும் தூக்கத்திலே கெட்ட கெட்ட கனவா வரும் பாஸ்.

நம்மிடம் யாரும் பண உதவி மட்டும் கேட்க மாட்டாங்க பாஸ். நம்மளை விட ஏழை யாராவது கேட்டு, கையில் இருப்பதை தந்துவிட்டாலோ, தானமா கொடுத்திட்டா நினைச்சு, மறந்திருவேன் பாஸ்.

கிரடிட் கார்டு என்கிட்ட கிடையாது பாஸ். வீட்டுல வந்து பார்த்துட்டு, பிரிஜ் இல்ல, கிரைண்டர் இல்ல! இவன் ஒர்த் இல்லன்னு சொல்லி, கிரடிட் கார்டு தரமறுத்துட்டாய்ங்க பாஸ். டெபிட் கார்டுல 5 தேதிக்கு மேலேயே ஜீரோ பேலன்ஸ் வந்துரும் பாஸ். நான் யாருகிட்ட டெபிட் கார்டு கொடுக்கிறது பணம் எடுத்துங்கங்க என சொல்றது பாஸ்?

அப்புறம் பாஸ். இந்த பொய். கடன் வாங்குகிறதில உள்ள பயம் என்ன பயம் தெரியுமா பாஸ். பொய். சரளமா சொல்லனும். சென்னையில இருந்துகிட்டே மும்பாய் போயிருக்கிறதா சொல்லனும். செக்கே வராவிட்டாலும், செக் பவுன்ஸ் ஆயிருச்சுன்னு கொஞ்சும் கூட வாய் கூசாம‌ சரடு விடனும் பாஸ். நாம தப்பி தவறி ஒரு பொய் சொல்லிட்டா, அந்த பொய் மடியிலேயே கனமா இருக்கும் பாஸ். எப்ப அவிழ்ந்து விடும்னு பயத்திலே திக்கு திக்குன்னு இருக்கும் பாஸ். நம்மலால முடியாது பாஸ்.

பிறகு, கடன் வாங்குறதுக்கு தோல் கலரு முக்கியமான தகுதி பாஸ். சிவப்பா இருக்கிறவன் நேர்மையானவன். கருப்பா இருக்கிறவன்னு பிராடுன்னு எல்லோரும் நம்புறாங்க பாஸ். நம்ம கருப்பு பாஸ். யார் பாஸ் நம்மளை நம்பி, கடனை தருவாங்க?

இன்னொரு விஷயம் பாஸ். ஒரு மனுசனுக்கு முடியலைன்னு, டக்குன்னு துண்ட விரிச்சு "போடுங்க மக்களே!" என கலெக்ட் பண்ற டைமிங் மேனேஜ்மென்ட் நமக்கு சுட்டு போட்டாலும் வரவே வராது பாஸ். அதற்கு பிறகு, போட்ட மக்களே பணத்தை கேட்கும் பொழுது, துண்டுல கலெக்ட் பண்ணுனதை, ரொட்டேஷன்ல விட்டு, பல மாதங்கள் கழித்து, கர்ச்சீப்-ல கட்டித்தர்ற சாமர்த்தியம் இந்த ஜென்மத்திலே வரவே வராது பாஸ்.

எல்லாத்தையும் செஞ்சுட்டு, வருந்தி மன்னிப்பு கேட்டுகிறேன். மிக அதிக கால அவகாசம் தேவைப்படுகிறது என சொல்லி, மக்கள் மறக்கிற வரைக்கும், எஸ்கேப் ஆவறதுக்கு ஒரு தில் வேணும் பாஸ். அந்த தில் நமக்கெல்லாம் வர்றதுக்கு முன்னாடி வயசாகி மண்டைய போட்டுறுவோம் பாஸ்.

இன்னும் முக்கியமான ஒண்ணு பாஸ். நண்பர்கள் பாஸ். எவ்வளவு தான் தப்பு, தண்டா, பொறுக்கித்தனம், பிராடுத்தனம் பண்ணினாலும், நம்மளை சுத்தி தூண் மாதிரி நின்னு காப்பத்தறது அவங்க தான் பாஸ். எனக்கும் தான், டைமிங் மேனேஜ்மென்ட், கேஸ் மேனஜ்மென்ட், பீலிங்ஸ் மேனேஜ்மென்ட் பலவீனமா இருக்கு பாஸ். இதெல்லாம் தெரிஞ்ச நமக்கு வாய்ச்ச நண்பர்கள் நம்மளை விட நல்லவங்க பாஸ். மத்தவங்க வந்து கும்ம‌ தேடுறதுக்கு முன்னாடியே, நம்மளை தூக்கிலே மாட்டி தொங்க விட்டுறுவாங்க‌ பாஸ்.

நம்ம 'டம்மி பீஸ்' பாஸ். இதெல்லாம் வாய்ச்சவங்க 'ஜென்டில்மென்' பாஸ்.

*****

இந்த பதிவுக்கு தொடர்பில்லாத சுட்டிகள் :





7 பின்னூட்டங்கள்:

Anonymous said...

பழி நாணப் பழகுங்கள் நர்சிம்!

முக்கியமான ஐட்டத்தை விட்டுட்டீங்களே. இதையும் அந்த சம்பந்தமில்லாத பதிவுகள் லிஸ்ட்ல போட்டுக்குங்க.

குருத்து said...

முக்கியமான, அழுத்தமான சம்பந்தமில்லாத பதிவு தான்.இணைச்சுட்டேன். நன்றி அனானி.

சீனு said...

//கருப்பா இருக்கிறவன்னு பிராடுன்னு எல்லோரும் நம்புறாங்க பாஸ். நம்ம கருப்பு பாஸ். யார் பாஸ் நம்மளை நம்பி, கடனை தருவாங்க?//

நீங்க இப்படி சொல்றீங்க. ஆனா, இப்பல்லாம் வெள்ளையா இருக்கிறவன் எல்லாம் டெக்னிக்கலா திருடுவாங்கன்னு கடனே கொடுக்கிறது இல்லைங்க. கிராமத்தான்னா மான, மரியாதைக்கு பயந்து திருப்பி கட்டிடுவாங்கன்னு நினைக்கறாங்க பாஸ்.

சீனு said...

கருத்து கந்தசாமி ஆன பொறவு தான் தெரிஞ்சது...இது இன்னோரு விவகாரத்தோட கன்ட்டினுட்டினு. அதனால, மேல நான் சொன்னது பொதுவான கருத்து மட்டுமே சாமியோவ்...

எண்ணங்கள் 13189034291840215795 said...

நண்பர்கள் நம்மளை விட நல்லவங்க பாஸ். மத்தவங்க வந்து கும்முறதுக்கு தேடுறதுக்கு முன்னாடியே, நம்மளை தூக்கிலே மாட்டி தொங்க விட்டுறுவாங்க‌ பாஸ்.//

:)))

Vijay said...

மிகவும் சரியான பதிவு. நீங்கள் நியாயமாக நடக்கும் வரை உங்கள் கழுத்தை பிடிப்பார்கள். நீங்களும் பதிலுக்கு முரண்டு பிடித்தால் ஒன்னும் செய்ய மாட்டார்கள். அனுபவம்!

குருத்து said...

கருத்துக்களை பகிர்ந்துகொண்ட அனைவருக்கும் என் நன்றிகள். இந்த பதிவு எழுதுவதற்கு அடிப்படையான விசயம். நர்சிம்‍மின் நண்பர்கள் தான். "அதுதான் பணத்தை கொடுத்திட்டாரில்ல!" "கேஸ் மேனேஜ்மென்ட் சரியில்லை" என மிகவும் சுருக்கி பேசி, மூடப்பார்க்கிறார்கள். நர்சிம்மை துவக்கத்திலேயே அவர்களே சரிசெய்திருந்தார்கள் என்றால், பொதுவெளியில் இவ்வளவு அசிங்கப்படவே தேவையில்லை.