April 25, 2011
சாயிபாபா பற்றிய பிரபலமான பாடல் ஒன்று!
சாயிபாபா இறந்துவிட்டார். அவரின் பக்தர்கள் கலங்குகிறார்கள். கண்ணீர்விடுகிறார்கள். அதை விட பத்திரிகைகளும், சானல்களும் கலங்குகிறார்கள். கண்ணீர்விடுகிறார்கள்.
சாயிபாபாவை போற்றுகிற பஜனைப் பாடல்கள் பிரபலமானவை. அதைப்போலவே சாயிபாவை அம்பலப்படுத்துகிற இந்த பாடலும் மிகப்பிரபலமானது.
புரட்சிகர அமைப்பான மக்கள் கலை மன்றம் அமைப்பால் எழுதப்பட்ட பாடல். லட்சக்கணக்கான மக்கள் கூடியிருக்கும் வேளையில், மேடையில் மக்கள் கலைஞன் கத்தார் இந்த பாடலை பாடும் பொழுது, மக்களும் சேர்ந்து பாடுவார்கள்.
காலையில் தொலைபேசி செய்து ஒரு தோழரிடம் கேட்டேன். அவர் சில வரிகளை நினைவுப்படுத்த, என் நினைவுகளில் இருந்து சில வரிகளை சேர்க்க பாடல் தயார். இந்த பாடல் இன்னும் இது போல பல சரணங்களை கொண்டது.
சாயிபாபா பக்தர்களுக்கு இந்த பாடலை சமர்ப்பிக்கிறேன்..
****
சாயிபாபா! சத்ய சாயிபாபா!
உன் சங்கதியெல்லாம்
தெரிஞ்சு போச்சு சாயிபாபா!
(சாயிபாபா)
யுத்தம் ஒண்ணு வரப்போகுதாம் சாயிபாபா!
பயமாத்தான் இருக்குதே சாயிபாபா!
வண்டி வண்டியா திருநீறு தர்றோம் சாயிபாபா! - எல்லையில
ஊதிக்குன்னு உட்கார்ந்திரு சாயிபாபா!
(சாயிபாபா)
மந்திரமெல்லாம் போட்டு சாயிபாபா!
லிங்கமெல்லாம் கக்குகிறேயே சாயிபாபா!
எங்களுக்கு அதெல்லாம் வேணாம் சாயிபாபா!
பெரிய பூசணிக்காய் கக்கி கொடு சாயிபாபா!
(சாயிபாபா)
ஒரு நாள் காரில் போனே சாயிபாபா!
பெட்ரோல் தீர்ந்து போச்சு சாயிபாபா!
மந்திரத்தில பெட்ரோல் வரவச்சயே சாயிபாபா!
பெட்ரோல் விலை கூடிப்போச்சு சாயிபாபா! - உன்னை
பெட்ரோல் பங்குல உட்கார வைக்கப்போறோம் சாயிபாபா!
(சாயிபாபா)
வயசான பாட்டி வந்தா சாயிபாபா
முகத்தை திருப்பிக்கிற சாயிபாபா!
குமரிப்பெண்ணு வந்தா சாயிபாபா
ஓரக்கண்ணால் பார்க்கிறியே சாயிபாபா!
(சாயிபாபா)
மக்களெல்லாம் விவரமாயிட்டோம் சாயிபாபா!
உன் லீலையெல்லாம் தெரிஞ்சு போச்சு சாயிபாபா!
உனக்கு வெளக்குமாறு பூஜை போட
நாங்க ஒன்னா வரப்போறோம் சாயிபாபா!
(சாயிபாபா)
****
தொடர்புடைய சுட்டிகள் :
அனுதாபங்கள் சாயிபாபா பக்தர்களுக்கு! - மருத்துவர் ருத்ரன்
யார் கடவுள் சாயிபாபாவா? பேஸ்மேக்கரா? - பதிவர் சந்தனமுல்லை - வினவு.
சாய்பாபா : சண்டையில் கிழியாத சட்டை எந்த ஊர்ல இருக்கு? - பாரதி தம்பி - வினவு
Subscribe to:
Post Comments (Atom)
2 பின்னூட்டங்கள்:
வாழ்த்துக்கள். பெட்ரோல் வரவழச்ச சாய்பாபா,பெட்ரோல் இல்லாம வண்டி
ஓட்டு சாயபாபா என்று வர்ர மாதிரி இருக்கிற மாதிரி சந்தேகம்
வலிபோக்கன்,
நீங்கள் சொல்வது போல வரலாம். இந்த பாடல் நான் கேட்டு 10 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆகையால், சில வரிகளில் என் கற்பனை கலந்து தான் எழுதியுள்ளேன்.
தங்கள் கருத்துக்கு நன்றி.
Post a Comment