> குருத்து: 2021ல் பார்த்த படங்கள் பற்றிய ஒரு பார்வை

January 4, 2022

2021ல் பார்த்த படங்கள் பற்றிய ஒரு பார்வை









கடந்த வருடம் நாலு படங்கள் பார்த்தால், ஒரு படத்தைப் பற்றி எழுதினேன். கொரானா காலத்தில் வீட்டில் மூன்று மாதங்களுக்கு மேல் வீட்டிற்குள் அடைப்பட்டு கிடந்ததில் நிறைய படங்கள் பார்த்தேன். பார்த்த படங்களை அறிமுகப்படுத்தி எழுதியது மொத்தம் 69. ஆனால் இந்த வருடம் இரண்டு படங்கள் பார்த்தால், ஒரு படத்தைப் பற்றி எழுதிவிடுகிறேன். இந்த வருடம் 74 படங்கள் வரைக்கும் எழுதியிருக்கிறேன். இது கடந்த ஆண்டை விட சிறு வளர்ச்சி எனலாம்.


என்னப் படங்கள் பார்க்க விரும்புகிறேன்?

பார்த்த படங்களை வைத்து உரசிப் பார்த்ததில், அடிதடி படங்கள், காதல் படங்கள் என்ற வழக்கமான டெம்பளேட் படங்களை தவிர்க்கிறேன். திரில்லர் படங்கள், சமூகம் சார்ந்த படங்கள், வித்தியாசமான பேய் படங்கள் பிடிக்கிறது. இதில் சில படங்கள் பீல் குட் படங்களாக இருப்பதற்கு காரணம் குடும்பத்தோடு பார்த்திருப்பேன்.

படங்களை எப்படி தேர்ந்தெடுக்கிறேன்?

நண்பர்கள் மூலம், வலைத்தளங்கள் மூலம் கிடைக்கிற படங்களை IMDB யில் எவ்வளவு பேர் வாக்களித்திருக்கிறார்கள்? என்ன மதிப்பெண்? என பார்ப்பேன். என்ன கதை என சில வரிகள் படிப்பேன். ஒரு டிரைலர் பார்ப்பேன். முடிவெடுத்துவிடுவேன்.

எதை எழுதுகிறேன்?

ஒரு படத்தைப் பற்றி பலரும் எழுதியிருந்தார்கள் என்றால் தவிர்க்கிறேன். அப்படித்தான் ஜெய்பீம், மாநாடு, சார்பட்டா பரம்பரை விடுபட்டிருக்கின்றன. தேறாத படங்களை விட்டுவிடுகிறேன். நல்ல படம் என்றால் எழுதுகிறேன். சில மோசமான படங்களிலிருந்து மக்கள் காப்பாற்றப்படவேண்டும் என விரும்பி, எழுதுகிறேன்.

எந்த அடிப்படையில் அறிமுகப்படுத்துகிறேன்?

படத்தைப் பலரும் பலவிதமாக எழுதுகிறார்கள். நடிகர்களின் நடிப்பை, தொழில் நுட்பங்களை. வசூலை சிலாகித்து எழுதுகிறார்கள். நான் முக்கியமாக பார்ப்பது கதையைத் தான். அதில் சொல்லப்படுகிற கருத்து தான் முக்கியம் என்பேன். அந்தப் படம் எந்த தாக்கத்தை சமூகத்தில் வினையாற்றுகிறது என்பதை இணைத்து எழுதுகிறேன். சிலர் ”என் கருத்தை” வலிந்து எழுதுவதாக சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். ஒரு இயக்குநரோ ஒரு படக் குழுவோ எவ்வளவோ கதைகள் இருக்க… இந்த கதையை தேர்ந்தெடுப்பதற்கு ஒரு சிறப்பு காரணம் இருக்கும் அல்லவா! அது போல அந்த படம் எனக்குள் எழுப்பிய கேள்வியை, தாக்கத்தை எழுதுகிறேன்.

2020, 2021 பிடித்த படங்களை பார்ப்பது! எழுதுவது! என்றாகிவிட்டது. முன்பு ஒரு முறை புகழ்பெற்ற எழுத்தாளர்களின் மாஸ்டர் பீசை படிப்பது என முடிவு செய்து படித்தேன். அது போல புகழ்பெற்ற இயக்குநர்களின் மாஸ்டர் பீசை பார்ப்பது என யோசித்துள்ளேன். நிறைய குட்டி குட்டி நாடுகள் எடுத்த நல்லப் படங்களை பார்க்கலாம் என யோசித்துள்ளேன்.

மற்றபடி, பேஸ்புக் நண்பர்கள், திரைப்படங்கள் சார்ந்த குழுவை நடத்தும் நண்பர்களுக்கு, குழு உறுப்பினர்களுக்கு தான் நன்றி சொல்லவேண்டும். தொடர்ந்து அவர்கள் தான் எழுதுவதற்கு உற்சாகப்படுத்துகிறார்கள். நல்ல படங்களை அறிமுகப்படுத்துகிறார்கள்.

சிலர் அவர்கள் எழுதுகிற படங்களைப் பற்றி என் கருத்துக்களை சொன்னால், வருத்தப்படுகிறார்கள். அதை நான் விவாதிப்பதாக புரிந்துகொண்டு சொல்கிறேன். சிலர் குறை சொல்வதாக புரிந்துகொள்கிறார்கள். நம்முடைய மரபு என்பது விவாத மரபு தான். ஆகையால், நான் எழுதுவதில் ஏதேனும் கருத்துக்கள், எதிர்க்கருத்துகள் இருந்தால், தாராளமாய் சுட்டிக்காட்டலாம். அதற்காக வருந்தமாட்டேன். அதைத் தான் உண்மையில் வரவேற்கிறேன்.

இந்த புத்தாண்டில் அனைவருக்கும் நன்றிகளும்! வாழ்த்துகளும்!

2021ல் பார்த்தப் படங்கள்

1. Kothanodi (Assam)
2. Joseph (Malayalam)
3. Iru Thruvam – Tamil Web Series
4. Get out - English
5. Beach – English
6. Poochudava - Tamil
7. Welcome Home - Marathi
8. Tribhanga - Hindi
9. Haunting Bly Manor - English
10. Teddy - Tamil
11. My sassy girl (2001) South Korea
12. Time Traveler’s wife - English
13. Pee mak (2013) Thailand
14. Neigbors – South Korea
15. Joji - Malayalam
16. Collateral - English
17. Gangster cop devil – South Korea
18. Perfume - English
19. Handmaiden – South Korea
20. Now you see me - English
21. Frozen Flower (2008) South Korea
22. Hidden face - English
23. Along with God – South Korea
24. Fargo - English
25. Equalizer - English
26. Equalizer 2 - English
27. Dragula Untold - English
28. Time to Kill - English
29. Game - English
30. November story 2021 – Tamil Web series
31. Dejavu – English
32. Mirage - English
33. Inside Man - English
34. Cure (1996) - Japan
35. Remember The Titans (2000)
36. Man of fire - English
37. Cold case (2021) Malayalam
38. Nipunan - Tamil
39. Palaivanacholai - Tamil
40. Under Rome – Web Series - English
41. Pay Back (English)
42. The perfection (English)
43. Mother (South Korea)
44. Bittersweet Life (South Korea)
45. Fingertip (Web Series)
46. Netrikan Tamil
47. Biutiful - English
48. Focus - English
49. My girl friend alien – south korea web series
50. Eternal shunshine of the spotless mind (2004)
51. 12B Tamil
52. John Q - English
53. About Time - English
54. Training day - English
55. Safe House - English
56. Confidential Assignment – South Korea
57. Lift - Tamil
58. Unstoppable - English
59. Flight 2012 English
60. Vinodhaya Sitham - Tamil
61. The call – South Korea
62. The Invitation - English
63. Oh mana penne - Tamil
64. Jungle cruise - English
65. Finch - English
66. Ludo - Hindi
67. Raat Akeli Hai - Hindi
68. Vanam - Tamil
69. Girl on train - HIndi
70. PK - Hindi
71. Aranyak - Web Series
72. Galatta Kalyam (2021) Tamil
73. Minnal Murali (2021) Malayalam
74. Taare Zameen Par (Hindi)

#குறிப்பு : பார்த்தப் படங்களின் புகைப்படங்களை ஒரு பைலாக (Folder) போட்டு வைத்திருந்தேன். எல்லாவற்றையும் தொகுப்பாக (Collage) உருவாக்கித் தந்த என் பொண்ணுக்கு நன்றி.

0 பின்னூட்டங்கள்: