ஜேசுதாஸ், பி. சுசீலா, எல். ஆர். ஈஸ்வரி, பிலிம் நியூஸ். ஆனந்தன் என படத்தில் உழைத்த அனைவரும் இறுதி காட்சிகளில்!
தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்த பொழுது வீணை எஸ். பாலச்சந்தரின் பொம்மை பார்த்தேன்.
படம் ஒரு திரில்லர். படம் முடிந்து சுபம் போடும் பொழுது, அரை டிராயருடன் ஒரு மனுசன் கொஞ்சம் இருங்க என பார்வையாளர்களை சொல்கிறார்.
'அதே கண்கள்' படத்தில் ஏவிஎம் முதலாளி படத்தின் இறுதியில் அந்த படமும் திரில்லர் என்பதால், படத்தின் கொலைகாரனை யாரிடமும் காட்டிக்கொடுக்காதீர்கள். (கல்லா கட்ட முடியாது) என கெஞ்சி கேட்டுக்கொள்வார்.
இப்பொழுது போல செல் இல்லை. ஆனால், சொந்தக்காரன், பந்தாக்காரன் எல்லோரிடமும் அடுத்தடுத்த நாட்களில் காட்டிக்கொடுத்துவிட்டு நிம்மதி அடைந்திருப்பார்கள். அதுக்கு பிறகும் மக்கள் குடும்பம், குடும்பமாய் பார்த்திருப்பார்கள் என்பது தனிக்கதை.
எல்லா நடிகர்களையும், திரைக்கு பின்னால் தொழில்நுட்ப கலைஞர்களையும் அவர்களை பெயர் சொல்ல சொல்லி அறிமுகப்படுத்துகிறார். ஆச்சர்யம். இந்திய திரையில் முதல் முறையாக இந்த படம் தான் இருக்கும் என நினைக்கிறேன்.
அந்த காட்சிகள் மட்டும் யூடியூப்பில் இருந்தன. பாருங்கள்.
https://www.youtube.com/watch?v=LL_EEkZJw50&t=3s
0 பின்னூட்டங்கள்:
Post a Comment