ஒடுக்கப்பட்ட வரலாறுகளில் கருப்பின அடிமைத்தளத்தின் வரலாறும் முக்கியமான ஒன்று. 1862ல் தான் அடிமைப்படுத்தப்பட்டிருந்த கருப்பினத்தை சார்ந்தவர்களுக்கு அமெரிக்காவில் விடுதலை அறிவிக்கப்பட்டது. விடுதலை அறிவிக்கப்பட்டாலும் அதற்கு பிறகும் சமூகம் இன்னமும் நிறவெறியுடன் தான் நடந்துகொள்கிறது. தொடர்ந்து வரும் செய்திகள் அதைத்தான் நிரூபிக்கின்றன.
கருப்பின அடிமைத்தள விடுதலையை முன்னிட்டு ஜூன் 19ந் தேதியை விடுமுறை தினமாக அமெரிக்கா இப்பொழுது அறிவித்திருக்கிறது. வரவேற்போம். தொடர்ந்து போராடுவதின் மூலம் தான் நிரந்தரமாக இனவெறி ஒழியும்.
****
1981ல் ஒரு ரக்பி வீரரின் இறப்பில் பலரும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்துகிறார்கள். 1971க்கு படம் நகர்கிறது. அமெரிக்காவின் தென்கிழக்கு பகுதியான விர்ஜினியா மாகாணம். அங்கு சமூகத்தில் நிறவெறி மிக அதிகமாக இருக்கிறது. அங்கு ஒரு Titans உயர்நிலைப்பள்ளியில் ரக்பி விளையாடும் குழு இருக்கிறது. அதில் உள்ள வீரர்களும், கோச்சும் வெள்ளையினத்தவராக இருக்கிறார்கள்.
கருப்பு, வெள்ளை மாணவர்களை இணைத்து ஒரு குழுவை உருவாக்கவேண்டும். அதற்கு தலைமை பயிற்சியாளராக ஒரு கருப்பினத்தைச் சேர்ந்த நாயகனை நியமிக்கிறார்கள். வெள்ளையின கோச்சே கருப்பினருத்தவருக்கு கீழே பணிபுரிய மறுக்கிறார். அவர் இல்லையென்றால், வெள்ளையின மாணவர்களும் விளையாட மறுக்கிறாரகள். அவர்கள் விளையாடாமல் போனால், அவர்களுக்கு கிடைக்க கூடிய உதவித்தொகை கிடைக்காமல் போகும் என்பதால், வெள்ளையின கோச் அவருக்கு கீழே வேலை செய்ய சம்மதிக்கிறார்.
பயிற்சியின் பொழுது மாணவர்களிடையே சண்டை வருகிறது. நாயகன் தன் அதிகாரத்தை பயன்படுத்தி, கருப்பின மாணவன், வெள்ளையின மாணவன் இருவரும் தங்களைப் பற்றிய விவரங்களை பகிர்ந்துகொள்ளவேண்டும். அதை தன்னிடம் வந்து தெரிவிக்கவேண்டும் என அறிவிக்கிறார்.
இப்படி பல சவால்களை எதிர்கொண்டு, அந்த ரக்பி குழு வெற்றிகளை ஈட்டியதா? என்பதை முக்கால்வாசிப் படத்தில் உணர்வுபூர்வமாக சொல்லியிருக்கிறார்கள்.
*****
ஒரு விளையாட்டுக்குழுவில் ஏற்படும் மாற்றம் சமூகத்தில் என்னவித மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதை பார்க்கும் பொழுது ஆச்சர்யமாய் இருக்கிறது. குழுவில் உள்ள கேப்டன் மாணவன் தன் கருப்பின நண்பனை தன் காதலியிடம் அறிமுகப்படுத்துவான். அவன் கையை நீட்டுவான். அவள் கை கொடுக்கமாட்டாள். பின்னாட்களில், அவளே வந்து கைகொடுப்பாள். ஒரு கருப்பின மாணவன் அருகே அந்த போலீஸ் ரோந்து வண்டி நிற்கும். அந்த வெள்ளையின அதிகாரியைப் பார்த்து இவன் கொஞ்சம் தயக்கம் கொண்டு”ஆபிசர்?” என்பான். ”நேற்று
அருமையாக
விளையாடினீர்கள். வாழ்த்துகள்
” என்பார். இந்த நல்ல மாற்றத்திற்கு அடிப்படையானவர்கள், வெள்ளையினத்தைச் சேர்ந்த ஜனநாயக உணர்வு கொண்டவர்கள் தான். படத்தில் Denzel Washington தான் தலைமை பயிற்சியாளராக வருகிறார். ஆளுமையான,
அருமையான
நடிப்பு. உண்மைக் கதை என்பதால், படத்தில் பலருக்குமே நல்ல வாய்ப்பு கிடைத்திருக்கும். எல்லாருமே நன்றாக செய்திருக்கிறார்கள்.நல்ல படம். பாருங்கள். Hot Starல் இருப்பதாக Just Watch சொல்கிறது.
0 பின்னூட்டங்கள்:
Post a Comment