> குருத்து: புத்தகங்கள் அனுப்பி வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி.

October 9, 2022

புத்தகங்கள் அனுப்பி வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி.



பிறந்தநாள் எப்பொழுதும் அக்டோபர் முதல் தேதி போல நினைவு வரும். பிறகு நாள் முடிந்து இரண்டு நாட்களுக்கு பிறகு நினைவுக்கு வந்து போகும். கொண்டாட்டம் என எப்பொழுதும் இருந்தது இல்லை.


”வாசிப்பை நேசிப்போம்” முகநூலில் ஆரோக்கியமாய் இயங்கும் குழு மூலமாக பிறந்தநாளை புத்தகங்கள் கொடுத்து கொண்டாடலாம் என நிர்வாகி கதிர் தெரிவித்த பொழுது, உற்சாகமாக இருந்தது.

செப்டம்பர் இறுதியிலேயே புத்தகங்கள் வர துவங்கிவிட்டது. நேற்று வரை எல்லா புத்தகங்களையும் நானும், என் பொண்ணும் கவர்களை பிரித்த பொழுது வாழ்த்துகளுடன் இருந்த புத்தகங்களை ஒவ்வொன்றாக பிரித்த பொழுது அத்தனை உற்சாகமாய் இருந்தது. நேற்றே பதிவு போடலாம் என இருந்தேன். விடுமுறை என்பதால், ஒருநாள் காத்திருந்து போடலாம் என யோசித்தேன். இன்றும் கூட சில புத்தகங்கள் வந்து சேர்ந்தன

எங்கள் திருமணத்திற்கு மொய் என வாங்கவில்லை. கொடுப்பதாக இருந்தால், புத்தகங்களை மட்டும் பரிசாக கொடுங்கள் என சொன்ன பொழுது, மொத்தம் 55 புத்தகங்கள் பரிசாக தந்தார்கள். அதற்கு பிறகு மொத்தமாய் வந்தது இப்பொழுது தான்.

புத்தகங்கள் கொடுத்து கொண்டாடலாம் என்றால் பிறந்தநாளையும் ஒவ்வொரு வருடமும் நிச்சயம் கொண்டாடலாம்.

மீண்டும் ஒருமுறை அனைவருக்கும் நன்றி.

தோழமையுடன்

Muniasamy Ramakrishnan

பின்குறிப்பு : என் பிறந்தநாள் மே, 5 என முகநூல் சொல்லும். அது சான்றிதழில் இருக்கும் தேதி. (இப்பொழுது இருக்கும் சமூக சூழ்நிலையில், திடீரென நம்மை அடையாளம் காட்டச் சொல்லும் பொழுது, சிக்கல் வரக்கூடாது என்பதற்காக மே, 5 எனவே முகநூலிலும் பகிர்ந்துவிட்டேன்.

அக். 6 தான் உண்மையான பிறந்தநாள். இந்த பதிவின் மூலம் சொல்லிக்கொள்வது எல்லாம், நண்பர்களும், உறவுகளும் புத்தகங்களை பிறந்தநாளில் பரிசாக கொடுங்கள் என்பதைத்தான் நீட்டி முழக்கி சொல்லி இருக்கிறேன். :)

0 பின்னூட்டங்கள்: