> குருத்து: இன்றைய அமெரிக்க, ஐரோப்பிய மக்களின் நிலை!

December 23, 2008

இன்றைய அமெரிக்க, ஐரோப்பிய மக்களின் நிலை!


என்னுடைய பள்ளி பருவ காலத்தில் அம்மாவிடம் ஆசையாய் கேட்டிருக்கிறேன். “அம்மா! ஒரு நாய் வளர்க்கலாம்மா!”

எங்களுடைய மொத்த குடும்பமும் உழைப்பில் ஈடுபட்டாலும், வறுமையில் உழல்கிற குடும்பம்.

அம்மாவிடம் கேட்டதும், உடனே பதில் வரும்.

“உங்களுக்கே சோறு போட முடியல! இதுல அது வேற!”

“எதிர்வீட்டில் இரண்டு நாய் வளர்க்கிறார்களே!” என்பேன்.

“அது ஊரை கொள்ளையடிச்சு கந்து வட்டி-ல வர்ற பணம்டா!. அவங்க இன்னும் இரண்டு நாய் கூட வளர்ப்பாங்க!” என்பார் கோபமாய்.

****

இன்றைக்கு அமெரிக்காவிலும், ஐரோப்பியாவிலும் மக்களின் நிலை பரிதாபகரமான நிலை.

தங்களுடைய சேமிப்புகளை தொலைத்து, இருக்கிற வேலை இழந்து நிற்கும் அவர்களால் தங்களுடைய செல்ல வளர்ப்பு பிராணிகளை முன்பை போல ஆரோக்கியமான முறையில் கவனிக்க முடியவில்லை.


ஆகையால், பணம் செலுத்த முடிகிறவர்கள் தங்களுடைய செல்லப் பிராணிகளை காப்பகங்களில் ஒப்படைக்கிறார்கள். முடியாதவர்கள் வேறு பகுதிகளுக்கு சென்று தெருவில் விட்டுவிட்டு திரும்பி பார்க்காமல் வந்து விடுகிறார்கள்.

இந்த வளர்ப்பு பிராணிகள் சாப்பிடும் அளவு மற்றும் கலோரியின் அளவு எவ்வளவு தெரியுமா?

ஓரளவு வசதிப்படைத்த இந்தியர் சாப்பிடும் உணவை விட மூன்றுமடங்கு அளவும், கலோரியும் கொண்டவை.

மூன்றாம் உலக நாடுகளை கொள்ளையடித்து தங்களுடைய சொந்த நாட்டு மக்களை செல்லப்பிள்ளைகளாக பார்த்துக்கொண்டது. மக்களும் நிறைய செலவு செய்து பகட்டாய் வாழ்ந்தார்கள்.

அங்கு கடித்து, இங்கு கடித்து இறுதியில் தன் சொந்த நாட்டு மக்களையே முதலாளித்துவம் கடித்து குதறிவிட்டது.

அமெரிக்க, ஐரோப்பிய மக்கள் இனியாவது, ஏகாதிபத்திய நாடுகளான தங்கள் நாடுகள் பல்வேறு நாடுகளை கொள்ளையடிப்பதை எதிர்த்து குரல் கொடுக்க வேண்டும்.

2 பின்னூட்டங்கள்:

Anonymous said...

நாங்கள் திரும்பவும் பழைய மாதிரி யாரையாவது கொள்ளையடிச்சு திரும்பவும் பழைய வாழ்க்கைக்கு வரப் போறோமய்யா.

ஆளவந்தான் said...

உழைக்க மறுக்கும் மக்கள் கூட்டம் அதிக நாள் சந்தோசமாக வாழ முடியாது.