December 31, 2008
அமெரிக்க செனட் சீட் விலைக்கு வேண்டுமா?
“ஒபாமாவால் உருவான செனட் காலிப் பதவியை விற்கக்கூடிய சில்லரைத்தனமான செயலை கவர்னரே செய்திருப்பதும் நடந்துள்ளது. இது பிக்பாக்கெட்டுக்குச் சமமான செயலாகும். பொதுமக்களின் பணத்தைச் சூறையாடுவதாகும்.”-
பத்திரிக்கையாளர் சாய்நாத் எழுதிய கட்டுரையிலிருந்து...
****
அமெரிக்க அதிபராக இப்பொழுது தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் ஒபாமா, முன்பு இல்லியனாய்ஸ் மாகாணத்திலிருந்து செனட்டுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜெயித்ததும் செனட் பதவியை நவம்பர் 18 – யன்று ராஜினாமா செய்துவிட்டார். ஏனென்றால்.. அமெரிக்க அதிபராய் இருப்பவர் வேறு எந்த அவையிலும் உறுப்பினராக இருக்ககூடாது. எந்த அதிகார பொறுப்பிலும் இருக்கக்கூடாது என்ற விதி இருக்கிறது.
அந்த காலியான செனட் பதவியை தான் இல்லியனாய்ஸ் மாகாண ஆளுநர் ராட் பிளகோஜெவிக் (ஒபாமாவுடன் படத்தில் இருப்பவர்) நல்ல விற்பனைக்கு விற்க முயன்ற நிலையில், பிடிபட்டு எப்.பி.ஐ. யால் டிசம். 9 தேதியன்று கைது செய்யப்பட்டார்.
இந்த செய்தி உலகம் முழுவதும் தெரிந்து நிலை மோசமான நிலையில் ஒபாமா உட்பட பலர் அந்த கவர்னரை ராஜினாமா செய்ய கோரியும், அவர் பிடிவாதமாக மறுத்துவிட்டார்.
இந்த குற்றத்திற்கு 10 ஆண்டுகள் முதல் 20 ஆண்டுகள் வரைக்கும் கூட அமெரிக்க சட்டத்தில் தண்டிக்க இடம் இருக்கிறதாம். அதனால் என்ன? சட்டம், தண்டனை எல்லாம் ஏழை பாழைகளுக்கு தான்.
ஜாமீன் தொகையாக 4500 டாலர் கொடுத்து வெளியிலும் வ்ந்துவிட்டார்.
நேற்று இந்த கறைபடிந்த கவர்னர் அமெரிக்க செனட் உறுப்பினராக ரோலண்ட் டபிள்யூ. பூரிஸ் (காண்க : படம்) என்பவரை நியமித்தும் விட்டார்.
அமெரிக்க நாடாளுமன்றத்தில் செனட் உறுப்பினர்களாகவும், மாகாண கவர்னர்களாகவும் அமர்ந்திருப்பவர்களின் யோக்கியதை இவ்வளவு தான்.
Subscribe to:
Post Comments (Atom)
1 பின்னூட்டங்கள்:
"அதனால் என்ன? சட்டம், தண்டனை எல்லாம் ஏழை பாழைகளுக்கு தான்."
His predecessor George Ryan was convicted for corruption and is in prison now.
Post a Comment