> குருத்து: லெனின் பிறந்த நாளில்...

April 23, 2011

லெனின் பிறந்த நாளில்...



நேற்று மாலையில் மக்கள் கலை இலக்கிய கழகமும், அதன் தோழமை அமைப்புகளும், லெனின் பிறந்த நாளை முன்னிட்டு, சென்னையில் பல பகுதிகளிலும் அறைக்கூட்டங்கள் ஏற்பாடு செய்திருந்தார்கள். இனிப்புகளும் வழங்கினார்கள்.

அந்நிகழ்வில் சில தோழர்கள் லெனின் பற்றிய நினைவுகளையும், சோவியத் ரசியா தொடர்பான செய்திகளையும் பகிர்ந்து கொண்டார்கள். இரண்டு பெண் தோழர்கள் பகிர்ந்து கொண்டதை, உங்களோடு பகிர்கிறேன்.

****

சோவியத் ரசியாவில் லெனினை ஒருமுறை சந்தித்த ஓவியர், தோழர் லெனின் 'எழுதுவதாக, கூட்டத்தில் உரையாற்றுவதாக' என பல ஓவியங்களை வரைந்து மக்கள் பார்வைக்கு ஏற்பாடு செய்கிறார்.

பலரும் பார்த்து செல்கிறார்கள். ஒரு விவசாயி, ஒரு ஓவியத்தை குறு குறுவென்று பார்க்கிறார். லெனின் சில விவசாயிகளுடன் உரையாடுவதாக உள்ள படம் அது. ஓவியர் அவரிடம் " என்ன அப்படி பார்க்கிறீர்கள்?" என்றதற்கு, அந்த விவசாயி "இந்த படத்தில் லெனின் பனிக்காக கோட்டு போட்டிருக்கிறார். ஆனால், விவசாயிகள் கோட்டு ஏதும் அணியாமல் இருக்கிறார்கள். எங்கள் லெனின் இப்படிபட்டவரல்ல! விவசாயிகள் கோட்டு அணியவில்லையென்றால், அவரும் அணியமாட்டார்" என்றாராம்.

மக்கள் தலைவர் என்ற சொல்லுக்கு மகத்தான உதாரணம் தோழர் லெனின்.

****

நாங்கள் சிறு நகரம் ஒன்றில் இயக்க பிரச்சாரம் முடித்து, ஒரு கடைக்கு அருகே நின்று பேசிக்கொண்டிருந்தோம்.

ஒருவர் பக்கத்தில் இருக்கும் கடைக்கு, பேருந்து நிலையத்திலிருந்து, கடைக்கும் வருவதும், பின் சட்டை பையை தொட்டுப் பார்ப்பதும், யோசனையாய், மீண்டும் பேருந்து நிலையத்திற்கே செல்வதுமாய் இருந்தார். தோற்றத்தில் விவசாயியாக இருந்தார். ஐந்தாவது முறை வந்தவர், கடைக்குள் நுழைந்து, ஒரு ஐஸ்கிரீமோடு வெளியே வந்தார். ஒருவித கூச்சத்தோடு, சாப்பிட ஆரம்பித்தார்.

தன் உழைப்பால் ஊருக்கெல்லாம் விளைபொருள்களை உருவாக்கி தரும் விவசாயிக்கு, ஒரு ஐஸ்கீரிம் வாங்கி சாப்பிடுவது அபூர்வமான ஒன்றாக இருக்கிறது.

சோவியத் ரசியாவில், ஒரு விமான நிலையத்தில் நூற்றுக்கணக்கான சிறு சிறு விமானங்கள் வரிசையாய் நிற்கின்றன. அதைப் பார்த்த, ஒரு வெளிநாட்டு பயணி 'இந்த விமானங்கள் யாருக்கானவை?" என கேட்டதற்கு, இவைகள் எல்லாம் விவசாயிகளுக்கானவை. அவர்களுடைய கிராமத்திலிருந்து, இங்கு வருவதற்கு பயன்படுத்துகிறவை என்றார்களாம்.

*****

3 பின்னூட்டங்கள்:

வலிப்போக்கன் said...

மக்கள் தலைவரை காப்பியடித்தான்.இந்தியாவில்உள்ள பண்க்காரர்களின் தந்தை காந்தி

அருள் said...

வரலாறு காணாத வாக்குப்பதிவு எனும் கட்டுக்கதை.

http://arulgreen.blogspot.com/2011/04/blog-post_23.html

இளமாறன் said...

ரஷ்யாவில்
நவம்பர் புரட்சி வெற்றி பெற்ற பின் ஆட்சி பொறுப்பினை பாட்டாளி வர்க்கம் ஏற்கும் முதல் நாள் இரவு முழுவதும் கண் விழித்து அரசாணைகள் எழுதினார் லெனின். அதில் நிலங்கள் மீதான் தனியார் உரிமையினை ரத்து செய்து அவை அனைத்தும் சோவியத்துக்கே என அறிவித்தார் அந்த மக்களின் தலைவர்.

நம் நாட்டிலோ
பதவி சுகத்துக்காக வாழும் கலைஞர்
5 முறை ஆட்சி செய்தபின் மக்களளுக்கு புளுத்த அரிசி போடும் ஆணையை பதவியேற்ற மேடையிலே கையெழுத்து போட்டதை பெருமையாக வீரமணி, சுப வீ போன்ற அடிமைகள் பேசுகின்றனர்.