கண்பார்வை இழந்த முன்னாள் இராணுவ வீரர் தன் வீட்டில் தன்னந்தனியாய் வாழ்கிறார். ஒரு திருட்டு கும்பல் அந்த வீட்டிற்குள் நுழைய, பிறகு என்ன நடந்தது என்பதை முதல் பாகத்தில் சொல்லிருப்பார்கள்.
எட்டு வருடங்கள் கழித்து இந்த கதை. பதினொரு வயது பெண் குழந்தையை பள்ளிக்கும் அனுப்பாமல், தன்னோடு வளர்த்து வருகிறார். அந்த பெண்ணை கடத்த ஒரு மாபியா கும்பல் வருகிறது. எதற்காக கடத்த முயல்கிறார்கள்? அவர் காப்பாற்றினாரா இல்லையா என்பதை விறுவிறுப்பாக சொல்லியிருக்கிறார்கள்.
*****
ஒன்றரை மணி நேர சிம்பிளான கதை. வசனங்கள் மிகவும் குறைவு. ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு, சண்டை என எடுத்த விதத்தில் ஈர்க்கிறார்கள். கொலைகள் தான் கொஞ்சம் கொடூரமாக இருக்கிறது.
அவதாரில் வந்த வில்லன் Stephen Lang தான் இதில் பிரதான பாத்திரம். இதிலும் சிறப்பாக பொருந்தியிருக்கிறார். இதில் கொஞ்சம் பலவீனமாக இருப்பது போல தோற்றத்துடன் வருகிறார்.
நெட் பிளிக்சில் தமிழ் டப் செய்தே கிடைக்கிறது. சண்டை பிரியர்களுக்கு பிடித்தமான படம்.
0 பின்னூட்டங்கள்:
Post a Comment