பட்ஜெட் குறித்து பேச துவங்கும் பொழுது, நாமும் இனிப்போடு ஆரம்பிப்பது தானே சரி! பெரும்பான்மை மக்களுக்கு சாதகமாக எப்பொழுதும் பட்ஜெட்டில் ஏமாற்றமே மிஞ்சுகிறது. இந்த பட்ஜெட்டிலும் வருமான வரியில் கொஞ்சம் விலக்கு கிடைக்கும் என பெரிதாக எதிர்ப்பார்த்தார்கள். கடந்த ஏழு ஆண்டுகளாக இதை எதிர்பார்த்து பேசிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், இந்த பட்ஜெட்டிலும் பா.ஜனதா எந்த மாற்றத்தையும் செய்யவில்லை. விவேக் காமெடி தான் நினைவுக்கு வருகிறது.
பட்ஜெட் போடும் ஆளும் கட்சியே ”பெரும்பான்மை மக்களுக்கு நல்லது செய்துவிடுவோம் என எங்களைப் பற்றி கொஞ்சம் கூட தப்பாக எண்ணிவிடாதீர்கள்! எங்களுக்கு தேர்தல் நிதியை அள்ளித்தந்து, ஆட்சியில் அமர்த்தியவர்களுக்கு தான் நாங்கள் விசுவாசமாக இருப்போம். என சூசகமா சொல்வதற்காக தான் ஒவ்வொரு ஆண்டும் ’அல்வா’ கிண்டி தருவதை தவறாது செய்துவருகிறார்கள்.
மற்றபடி, பட்ஜெட் தயாரிக்கும் ஊழியர்கள், அதிகாரிகள் கூட்டாக ஓரிடத்தில் தங்கி, பட்ஜெட் வேலையில் ஈடுபடுகிறார்கள். அந்த நாட்களில் அவர்கள் வீட்டிற்கு செல்லக்கூடாது. செல்போன் பயன்படுத்த முடியாது. மூத்த அதிகாரிகள் மட்டும் வீட்டுக்கு போய்வருவார்கள். அப்படி இரவும், பகலும் அயராது பாடுப்பட்ட ஊழியர்களுக்காகவும், எந்தவொரு நல்ல காரியம் செய்யும் பொழுதும் இனிப்போடு துவங்குவதற்காகவும் தான் அல்வா தயாரிப்பதாக ஒரு ’கதை’ சொல்வார்கள். அதை நம்பாதீர்கள்.
இந்தமுறை கொரானா மூன்றாவது அலை நாடு முழுவதும் பரவி இருப்பதால், அந்த அல்வா கிண்டுவதிலும், கொடுப்பதிலும் சங்கடம் வந்துவிட்டது. ஆகையால் அல்வா சடங்கை இந்த முறை ரத்துசெய்துவிட்டார்கள்.
அதற்காக எல்லாம் பட்ஜெட்டில் மாற்றம் வரும் என எதிர்பார்த்துவிடாதீர்கள். எப்பொழுதும் போல ‘அல்வா” பட்ஜெட் தான்!
பட்ஜெட்2022
0 பின்னூட்டங்கள்:
Post a Comment