> குருத்து: இராஜஸ்தான் பயணம்

August 3, 2022

இராஜஸ்தான் பயணம்


மதுரையில் சில வழக்கறிஞர் தோழர்களின் முன்னெடுப்பில் 'குறிஞ்சி கூடல்' என்ற பெயரில், கீழடி துவங்கி பல சின்ன சின்ன பயணங்களை கடந்த சில ஆண்டுகளில் தொடர்ச்சியாக மேற்கொண்டிருக்கிறார்கள்.


அதே போல இந்திய அளவில் நான்கு மாநிலங்களுக்கு பெரிய பயணங்களும் செய்திருக்கிறார்கள்.

அதன் தொடர்ச்சியில் இந்த ஆண்டு செப்டம்பரில் இராஜஸ்தானில் வரலாற்று தடயங்களை காண ஒரு குழுவாக பயணம் செய்ய இருக்கிறார்கள்.

பயணங்களில் ஆர்வம் இருந்தாலும், யாரோடு இணைந்து பயணிப்பது என்ற தயக்கமும், தொடர்ச்சியாக சில நாட்கள் விடுப்பும், கொஞ்சம் கூடுதல் பணமும் எப்பொழுதும் பற்றாக்குறை தான்.

தோழர்கள் ஏற்பாடு செய்கிற பயணம் என்பதால், இந்த பயணத்தில் சந்தோசமாய் நானும் இணைந்துவிட்டேன். அடுத்த பயணத்தில் குடும்பத்தோடு போகலாம் என முடிவு செய்திருக்கிறோம்.

ஆகையால் அவ்வப்பொழுது இராஜஸ்தான் குறித்த பதிவுகளை போவதற்கு முன்பும், பின்பும் பதிவேன்.

ஆர்வமுள்ளவர்கள் படியுங்கள். கூடுதல் தகவலோ, அனுபவமோ இருந்தால் தெரிவியுங்கள்.

0 பின்னூட்டங்கள்: