> குருத்து: நமது GSTPS (GST Professionals Society) மூன்று ஆண்டுகளை வெற்றிகரமாய் நிறைவு செய்திருக்கிறது.

August 3, 2022

நமது GSTPS (GST Professionals Society) மூன்று ஆண்டுகளை வெற்றிகரமாய் நிறைவு செய்திருக்கிறது.





புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள். அவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுடன் இனிதே துவங்கியது. நமது சொசைட்டியின் பொதுக்குழு கூட்டத்தில் பெரும்பான்மையான உறுப்பினர்கள் கலந்துகொண்டது இன்னும் சிறப்பாக இருந்தது.

நமது சொசைட்டியின் தலைவர் (President) செந்தமிழ்செல்வன் கடந்த வந்த பாதையை உறுப்பினர்களுடன் பகிர்ந்துகொண்டார்.

நிதிநிலை அறிக்கை ஏற்பு

சொசைட்டியின் பொருளாளர் சுந்தர்ராம் கல்யாண் வரவு, செலவு, நிதிநிலை அறிக்கையை முன்வைத்தார். சொசைட்டி துவங்கிய பிறகு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக கொரானா காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. அதனால் நேரடி சந்திப்புக்கு வாய்ப்பில்லாததால், தொடர்ந்து ஜூம் வழியாக கூட்டங்கள் நடத்தப்பட்டது. ஆகையால், செலவுகள் மிகவும் குறைவாக செய்யப்படாததால், நிதி கையிருப்பு கூடுதலாக சொசைட்டியின் வசம் இருந்தது. அதில் ஒரு தொகையை வைப்பு நிதியாகவும் (Fixed Deposit) போட்டு வைத்திருக்கிறார்கள். அவ்வப்பொழுது ஏற்படும் சிநன்றி சின்ன செலவுகளை பொறுப்பில் இருப்பவர்கள் தங்கள் செலவில் செய்து வந்திருக்கிறார்கள். ஆகையால், உற்சாகமாக நிதி நிலை அறிக்கை உறுப்பினர்களின் ஆதரவுடன் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

நிர்வாகிகள் தேர்வு

சொசைட்டியின் தலைவர், துணைத்தலைவர், செயலர், இணைச்செயலர், பொருளாளர், செயற்குழு உறுப்பினர்கள் பதவிகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டது. ஏற்கனவே அனைத்து உறுப்பினர்களுக்கும் தேர்தல் குறித்து முறையாக தெரிவிக்கப்பட்டிருந்தது. நிர்வாக பொறுப்புகளுக்கு முன்வருபவர்கள் முன்வாருங்கள் என கோரப்பட்டிருந்தது. உறுப்பினர்களிடமிருந்து புதிதாக யாரும் முன்வராததால், ஏற்கனவே பொறுப்பில் இருந்தவர்களே, சில பொறுப்புகளுக்கு மட்டும் சிலரை மாற்றி முன்வைத்தார்கள்.

தேர்தலை கண்காணிக்கும், நடத்தும் பொறுப்பை நமது உறுப்பினர்களில் மூத்தவரான பட்டய கணக்காளர் ஓம் பிரகாஷ் அவர்கள் ஏற்றுக்கொண்டிருந்தார்.

ஒவ்வொரு நிர்வாக பதவிக்கும் ஒரு உறுப்பினர் மட்டுமே முன்மொழியவேண்டும். ஒரு உறுப்பினர் மட்டுமே வழிமொழியவேண்டும் என வழிகாட்டப்பட்டது. அதன்படி, ஒவ்வொருவரும் பதவியேற்றுக்கொண்டனர். பொறுப்பேற்ற அனைவருக்கும் அனைத்து உறுப்பினர்களும் ஏகோபித்த பாராட்டுகளை தங்களது கைதட்டல்கள் வழியே வழங்கினார்கள். புதிய நிர்வாகிகளுக்கு உறுப்பினர்களில் சிலர் முன்வந்து வாழ்த்தி பேசினார்கள்.

வேலைகள் அதிகமாவதால், (Acting) செயற்குழுவிற்கு புதிதாக நான்கு பேர் தேர்வு செய்யப்படுவார்கள் என ஏற்கனவே நிர்வாகிகளால் அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் உற்சாகமாக முன்வந்த நால்வரை நிர்வாகிகள் தெரிவிக்க உறுப்பினர்கள் முன்மொழிய, வழிமொழிய அவர்களும் உற்சாகமாக பொறுப்பு ஏற்றுக்கொண்டனர்.

நமது சொசைட்டியின் ஒவ்வொரு கூட்டமும் ஜி.எஸ்டி குறித்த புரிதலை உருவாக்கும் கூட்டம் தானே! சமீபத்தில் ஜி.எஸ்.டி கவுன்சில் அரிசி, மற்றும் அடிப்படை உணவு பொருட்களுக்கு வரி விதிக்கப்பட்டு இருந்தது. அது குறித்து தலைவர் செந்தமிழ்செல்வன் விவாதத்தை துவக்கிவைத்தார். கிட்டத்தட்ட 45 நிமிடங்களுக்கு மேலே விவாதம் சுறுசுறுப்பாக நடைபெற்றது. ஜி.எஸ்.டி குறித்த புரிதலை தந்தது.
சரியாக ஒரு மணிக்கு கூட்டம் முடிவுற்றது. ஒரு சுவையான மதிய உணவு எல்லோருக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த கூட்டம் புதிய இடமான எழும்பூர் பகுதியில் பெரியார் நெடுஞ்சாலையில் அமைந்திருந்த YWCA கட்டத்தில் நடைபெற்றது. கூட்டம் நடத்துவதற்கு அருமையான இடம்.

எல்லா ஏற்பாடுகளையும் சிறப்பாக ஏற்பாடு செய்த நிர்வாகிகளுக்கு நன்றி.

0 பின்னூட்டங்கள்: