கடலில் மிகப்பெரிய மீன் ஒன்று மீன் பிடிக்கும் மக்களை தொல்லை செய்கிறது. மன்னர் கடற் வேட்டையாளர்களை அனுப்பி கொல்ல உத்தரவிடுகிறார்.
கடற் வேட்டையாளர்களும் அந்த பெரிய மீனை தேடிச் செல்கிறார்கள். தோல்வியடைகிறார்கள். ஏம்பா பெரிய ஆளுன்னு சொல்றீங்க! ஒரு மீனை வேட்டையாட முடியலையா என மோசமாக திட்டுகிறார்.
அந்த மீனை இந்த முறை கொன்றே தீரவேண்டும் என புதிய ஆயுதங்களுடன் வெறியுடன் கிளம்புகிறார்கள். கடற் பயணங்களில் ஆர்வம் கொண்ட ஒரு குட்டிப்பெண் அவர்களுக்கு தெரியாமல் ஒளிந்துகொண்டு படகில் ஏறிவிடுகிறாள்.
அவள் தன் செய்கைகளால், அந்த பெரிய மீன் குறித்தப் பார்வையையே மாற்றிவிடுகிறாள். பிறகு என்ன ஆனது என்பதை கலகலப்பாக சொல்லியிருக்கிறார்கள்.
ஆட்சியாளர்கள் எப்பொழுதும் தங்கள் நலன்களுக்காக நிறைய பொய்களை சொல்வார்கள். அது தான் உண்மை என புத்தகங்கள் எழுதுவார்கள். அதன் வழியாக மக்களை ஏமாற்றுவார்கள் என்பதை அந்த கதையின் வழியாக சொல்கிறார்கள்.
நெட் பிளிக்சில் கிடைக்கிறது. தமிழிலும் டப்பிங் செய்திருக்கிறார்கள். நன்றாக இருக்கிறது. குழந்தைகளுக்கான படம். குழந்தை மனதுள்ளவர்களும் பார்க்கலாம்.
0 பின்னூட்டங்கள்:
Post a Comment