ஒரு சிறிய கிராமம். நிறைய மூடநம்பிக்கைகளுடன் மக்கள் வாழ்ந்துவருகிறார்கள்.
ஒரு துக்க காரியத்தில்
சொந்தங்கள் கூடும் பொழுது, ஒரு இளைஞனும், ஒரு பெண்ணும் கண்ணாலேயே பேசிக்கொள்கிறார்கள்.
இரவு வீடு திரும்பும் பொழுது, அந்த பெண்ணின் வீட்டு ஜன்னலில் எட்டிப் பார்க்க, அங்கு
ஒரு பாட்டி அலறுகிறது.
அங்கிருந்து தப்பிக்கும்
நோக்கில், பேய் தன் மீது இறங்கியதாக ஆடுகிறான்.
அந்த ஊர் முழுவதும் தீயாக பரவுகிறது.
தொலைக்காட்சியில் பிரபலமாக இருக்கும் சாமியார் பேய் விரட்ட அழைக்கப்படுகிறார்.
அந்த இளைஞனுக்கு பேயை விரட்டுவதற்கான
“சடங்குகளை” செய்த பிறகு கிராமமே நிம்மதியாகிறது. ஆனாலும், அடுத்தடுத்து இயல்பாய் நடக்கும்
சமாச்சரங்கள், “பேய்” இன்னும் அவனை விட்டு விலகவில்லை என நம்புகிறார்கள்.
அடுத்தடுத்து நடக்கிற கலாட்டாக்களும்,
உணர்வுப்பூர்வமாகவும் கதை சொல்லியிருக்கிறார்கள்.
***
செயற்கை கிராமமாக இல்லாமல், ஒரு சின்ன கிராமத்தை இயல்புக்கு நெருக்கமாய் எடுத்திருப்பது சிறப்பு. அவர்களுடைய நம்பிக்கைகள், ஒரு விசயத்தை எப்படி சிக்கலாக்குகிறது என்பதை நன்றாகவே எடுத்திருக்கிறார்கள். ”பேயா” இருந்தா கூட விரட்டியிருவார். நடிக்கிறவன்கிட்ட சிக்கிகிட்டு, அந்த சாமியார் உண்மையிலேயே அழுவது நகைச்சுவை தான்.
ரவியண்ணா ஊருக்கு ஒன்றென்றால் முன்னணியில் இருக்கிறார். அவருக்கு கல்யாணம் ஆகாமல் இருப்பது ஆச்சர்யம் தான். எனக்கென்னமோ கதைக்கு தேவை என்பதால், இயக்குநர் அப்படி ஒரு பாத்திரமாக எழுதியிருக்கிறார் எனப் பட்டது.
முன்பு ஆண்களை விட பெண்களுக்கு நிறைய பேய் பிடிக்கும். ஆனால் கடந்த இருபது ஆண்டுகளில் ”பேய் பிடிப்பது” குறைந்திருக்கிறது. இப்பொழுது பெண்கள் தங்கள் எண்ணங்களை, உணர்வுகளை வெளிப்படையாக பேசுவதால், குறைந்திருக்கலாம் என தோன்றுகிறது. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
படத்தில் இளைஞனாய் வருபவர் தான் இயக்குநர் துமினாட். முதல் படத்திலேயே ஒரு நல்ல படத்தை கொடுத்திருக்கிறார். வசூலிலும் பெரிய வெற்றிப்படமாகியிருக்கிறது. இப்பொழுது கன்னட உலகில் வில்லனாக, நாயகனாக, இயக்குநராக என புகழ்பெற்றவராக வரும் ராஜ் பி ஷெட்டி தான் மூன்று தயாரிப்பாளர்களில் ஒருவர். சாமியாராக வந்து கிராமத்தில் மாட்டிக்கொண்டு முழிக்கும் நபராகவும் சிரிக்கவைக்கிறார்.
பெரிய எதிர்பார்ப்பு இல்லாமல் பாருங்கள். உங்களுக்கும் பிடிக்கும். ஹாட் ஸ்டாரில் வெளியாகியிருக்கிறது. தெலுங்கிலும், மலையாளத்திலும் மொழிமாற்றம் செய்து வெளியிட்டிருக்கிறார்கள். தமிழில் வெளியாகவில்லை. யாரோ தமிழில் படம் எடுப்பதற்காக அனுமதி வாங்கியிருப்பதால், மொழி மாற்றம் செய்யவில்லை என காரணம் சொல்கிறார்கள்.
0 பின்னூட்டங்கள்:
Post a Comment