1990களில் கதை பயணிக்கிறது. அது சென்னையில் உள்ள பள்ளி. பதினொன்னாம் வகுப்பில் உள்ள மாணவர்கள் மத்தியில் நட்பு, காதல், குறும்புகள், தேர்வுகள் என படம் நகருகிறது. அதில் ஒரு காதல் ஜோடி. இன்னொரு மாணவி செய்கிற சேட்டைகளினால் பிரிகிறார்கள். இடைவேளை.
சில ஆண்டுகள் கழித்து, மீண்டும் ஒன்று கூடுகிறார்கள். ஓவ்வொருவரும் வேறு வேறு திசைகளில் பயணித்திருக்கிறார்கள். சிலர் நல்ல நிலைமையில் இருக்கிறார்கள். சிலர் சிரமப்பட்டு கொண்டிருக்கிறார்கள்.
கதையின் போக்கில் ஒரு பேண்டசியை நுழைத்து.. எதார்த்தத்தைப் பார்த்து ஆயாசமாய் இருக்கும் பார்வையாளர்களை மகிழ்ச்சியுடன் அனுப்பி வைத்திருக்கிறார்.
***
படத்தில் பலருடைய வாழ்க்கையிலும் மேஜிக்கை நடத்துகிற அந்த கற்பனை கடவுள் நிஜ வாழ்க்கையிலும் இருந்திக்கலாம். நன்றாக இருந்திருக்கும். ஏன் நிஜ வாழ்க்கை இத்தனை சுமைகளுடன், சிரமங்களுடன் இருக்கிறது. அதை மாற்றுவது எப்படி என்பதை நாம் தாம் யோசித்துப் பார்க்கவேண்டும்.
இயக்குநர் தர்புகா சிவாவை ”ராஜதந்திரத்தில்” ஒரு நகைச்சுவை பாத்திரத்தில் படம் முழுவதும் வந்து கலகலப்பாக்கினார். பிறகு ”கிடாரி”யிலும், ”என்னை நோக்கிப் பாயும் தோட்டா”விலும் இசையில் கவனம் ஈர்த்தார். இப்பொழுது இயக்குநராக களம் இறங்கியிருக்கிறார். படமும் நன்றாக வந்திருக்கிறது.
படத்தில் நடித்த பலரும் புதுமுகங்கள் தான். மாணவர்களாகவும், பிறகு இளைஞர்களாகவும் பொருத்தமாக இருக்கிறார்கள். நன்றாகவும் நடித்திருக்கிறார்கள்.
Zee5ல் ஓடிடியில் வெளியாகியிருக்கிறது. இப்படி குறைந்த பட்ஜெட்டில், இனி வருங்காலத்தில் பல படங்கள் வரும் என நன்றாக தெரிகிறது. இது போல நல்ல படங்களாக வந்தால் சந்தோசம் தான்.
0 பின்னூட்டங்கள்:
Post a Comment