> குருத்து: புத்தாண்டை உற்சாகமாக வரவேற்போம்! அரசு தரப்பு அபத்தங்களை அம்பலப்படுத்துவோம்!

January 4, 2022

புத்தாண்டை உற்சாகமாக வரவேற்போம்! அரசு தரப்பு அபத்தங்களை அம்பலப்படுத்துவோம்!


கொரானா மீண்டும் ஒரு புதிய அலை எழுந்து வருவதாக தொடர்ச்சியாக செய்திகளில் சொல்லப்படுகிறது. இன்னும் கவனமாக இருங்கள் என மத்திய அரசு மாநிலங்களுக்கு வலியுறுத்துகிறார்கள்.


அதனடிப்படையில் தமிழ்நாட்டில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் தடை செய்யப்பட்டு இருக்கின்றன. புத்தக கண்காட்சி தள்ளிப்போயிருக்கிறது. இன்னும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், கோவிலுக்கு கூட்டம் கூட்டமாய் போய்வருகிறார்கள். இருக்கட்டும்.

பாண்டிச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடியுள்ளார்கள். அவர்களுக்கு சரக்கு தான் முக்கிய வருமானம். ஆண்டின் துவக்கத்திலேயே வருமானத்தை விட்டுவிட முடியாது. ஆகையால் கொரானா கட்டுப்பாடுகளை காற்றில் பறக்கவிட்டு, கொண்டாட அனுமதிக்கிறார்கள். ஆனால், புதிய தலைமுறையில் எப்படி செய்தி சொல்கிறார்கள் என்றால்…. “இரண்டு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதா என சோதித்து அனுமதித்து இருப்பதாக” என கூசாமல் பேசுகிறார்கள். எல்லோரையும் சோதிப்பது சாத்தியமா? அப்படி செய்தார்களா? என ஒரு ஊடகமாக சோதிக்காமல், அரசு தரப்பு செய்திகளை வாந்தி எடுப்பது எந்த விதத்தில் சரி?

புத்தாண்டில் மக்களே விழிப்புணர்வுடன் இருப்போம்! அப்பொழுது தான் அரசு தரப்பு அபத்தங்களையும் நாம் கண்டிக்கமுடியும்!

0 பின்னூட்டங்கள்: