> குருத்து: 2022 – வாசிக்கவேண்டிய இலக்கில் உள்ள புத்தகங்கள்

January 4, 2022

2022 – வாசிக்கவேண்டிய இலக்கில் உள்ள புத்தகங்கள்

 










1. ஆதி இந்தியர்கள் - வரலாறு

2. சேப்பியன்ஸ் - வரலாறு
3. புத்தமும் தம்மமும் - அம்பேத்கார்
4. அம்பேத்கார் வாழ்க்கை வரலாறு
5. பெரியார் சமதர்மம் குறித்து
6. தெற்கிலிருந்து ஒரு சூரியன்
7. அமைப்பாய் திரள்வோம் – திருமாவளவன்
8. காலம் – ஸ்டீபன் ஹாக்கிங்
9. இஸ்லாத்தின் தோற்றமும் வளர்ச்சியும்
10. மார்க்ஸ் பிறந்தார்
11. உலகை குலுக்கிய 10 நாட்கள்
12. ஹோசிமின் வரலாறு
13. நவ சீனப் புரட்சியின் வரலாறு
14. அறியப்படாத கலாச்சாரப் புரட்சி
15. ஆண்டன் செகாவ் சிறுகதைகள்
16. லூசுன் சிறுகதைகள்
17. புதுமைப்பித்தன் சிறுகதைகள்
18. பாவெல் சக்தி சிறுகதைகள்
19. தீஸ்தா செதல்வாட் நினைவோடை
20. இந்து இந்தி இந்தியா – எஸ்.வி இராஜதுரை
21. நள்ளிரவில் சுதந்திரம்
22. வேள்பாரி – சு. வெங்கடேசன்
23. தமிழாற்றுப்படை – வைரமுத்து
24. சுளுந்தீ நாவல்
25. கன்னி நிலம் நாவல்
26. தோல் நாவல்

இந்தப் பட்டியல் - உலக வரலாறு, இந்திய வரலாறு, தமிழக வரலாறு, முக்கிய ஆளுமைகள், இலக்கியம், அறிவியல், தொழிலாளர்களின் வாழ்க்கை, சமகால தேவைக்கு தெரிந்துகொள்ள வேண்டியவை என்ற அடிப்படையில் தயாரித்துள்ளேன்.

இலக்கு இல்லாமல் படிக்கும் பொழுது, ஏதோதோ புத்தகங்கள் பக்கம் கவனம் போய்விடுகிறது. ஆகையால், படிக்க வேண்டிய புத்தகங்களை படிக்க முடியாமல் போய்விடுகிறது. இந்தமுறையும் அந்த தவறு நடந்துவிடகூடாது. ஆகையால், ஆண்டின் துவக்கத்திலேயே பட்டியலிட்டுவிட்டேன். இவைகளில் 90% புத்தகங்கள் என் வீட்டு நூலகத்திலேயே இருப்பது தான் இன்னும் சிறப்பு. (இப்படியும் சொல்லலாம். வாங்கி வைத்துக்கொண்டு படிக்கவில்லை. ராஸ்கல் 🙂 )

இந்த பட்டியலில் உள்ள சிறப்பும், சிரமமும் என்னவென்றால், எல்லா புத்தகங்களும் குறைந்தப்பட்சம் 250 பக்கங்களுக்கு குறையாமலும், அதிகப்பட்சம் 900 பக்கங்கள் வரை செல்கின்றன. வருடத்திற்கு 52 வாரங்கள். இரண்டு வாரத்திற்கு ஒரு புத்தகம் முடித்தால் தான் இந்த இலக்கை அடையமுடியும். சந்தோசமாய் மல்லுக்கட்டுவோம்.

இந்த பட்டியலில் இன்னும் நாலு புத்தகங்கள் இணைக்கலாம் என்று நினைக்கிறேன். இவைகளையும் அவசியம் படியுங்கள் என பரிந்துரையுங்கள். இணைத்துக்கொள்ளலாம்.

0 பின்னூட்டங்கள்: