ஓட்டத்தில் கலந்துகொண்ட, ஜெயித்த அனைவருக்கும் வாழ்த்துகள்!
இந்த ஆண்டின் துவக்கத்தில் வாசிப்பை நேசிப்போம் குழு நடத்தும் மாராத்தானில் கலந்துகொள்ளலாமா, வேண்டாமா என ஒரு சின்ன குழப்பம். ஜெயிக்கிறோமோ தோற்கிறோமோ கலந்துகொள்ளலாம் என முடிவு செய்து, ஒரு பதிவு எழுதி எண் வாங்கும் பொழுது 181 ஆகிவிட்டது.
ஜனவரியில் ஒரு புத்தகம். பிப்ரவரியில் ஒரு புத்தகம் என முடித்த பிறகு, கோமாளி படத்தில் நாயகன் கோமாவில் விழுந்தது போல நானும் வேறு வேலைகளில் மூழ்கிவிட்டேன். வாசிப்பை நேசிப்போம் வாட்சப் குழு மாராத்தானை நினைவுப்படுத்திக்கொண்டே இருந்தது. இப்படியும் சொல்லலாம். தொல்லை செய்துகொண்டே இருந்தது.


மீண்டும் அக்டோபரில் வாசிப்பை நேசிப்பொம் குழுவிற்கு செய்து கொடுத்த சத்தியம் கனவில் வந்து தொல்லை செய்தது. ஆனால் விட்ட இடத்திலிருந்து தொடரலாம். ஆனால் முடிக்க முடியுமா என்ற சந்தேகம் வந்தது. இருப்பினும் முயன்று பார்க்கலாம் என மாராத்தானில் ஓட ஆரம்பித்தேன்.
நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் படிக்க ஆரம்பித்தேன். ஆச்சர்யம். தேசாந்திரியை இன்று முடித்த பொழுது இலக்கான 25ஐ முடித்துவிட்டேன்.
இந்த ஆண்டு படித்த அனுபவத்தில்.. அடுத்த ஆண்டு வரலாறு, தன் வரலாறு, அறிவியல், சம கால தேவையான புத்தகங்கள் என ஒரு பட்டியலிட்டு படிக்கவேண்டும் என்ற உந்துதல் ஏற்பட்டுள்ளது.
அனைவருக்கும் புத்தாண்டு
வாழ்த்துகள்
! புதிய ஆண்டில் உற்சாகமாய் செயல்படுவோம்.RM0181 இலக்கு 25
25. தேசாந்திரி – எஸ். இராமகிருஷ்ணன் பக். 323
24. ஹாரி பார்ட்டரும் ரசவாத கல்லும் – நாவல் – பக். 350
23. கிழவனும் கடலும் – நாவல் - எர்னஸ்ட் ஹெமிங்வே பக். 104
22. போக புத்தகம் – போகன் சங்கர் – பக். 334
21. சினிமா வியாபாரம் – கேபிள் சங்கர் - பக். 192
20. எங் கதெ – இமையம் – பக். 110
19. கடல் பயணங்கள் – மருதன் - பக். 223
18. கண்ணுக்கு தெரியாமல் களவு போகும் நீர் – நக்கீரன் – பக். 35
17. இவான் குறுநாவல் – பக். 100
16. கம்யூனிசமும் குடும்பமும் - அலெக்சான்ட்ரா கொலந்தாய் - பக். 24
15. வசந்தத்தின் இடிமுழக்கம் - கவிதை தொகுப்பு - பக். 120
14. நான் வித்யா – லிவிங் ஸ்மைல் வித்யாவின் தன் வரலாறு – பக். 168
13. ஆத்தரங்கரையோரம் – இறையன்பு – பக். 203
12. இப்படிக்கு வயிறு – மருத்துவர் செல்வராஜன் பக். 136
11. இடமும் இருப்பும் – மனுஷ்யபுத்திரன் கவிதைகள் – பக். 110
10. நளினி ஜமீலா : ஒரு பாலியல் தொழிலாளியின் சுயசரிதை – வாழ்க்கை வரலாறு – பக். 184
9. கடவுள் தொடங்கிய இடம் அ. முத்துலிங்கம் நாவல் பக். 127
8. மேரி க்யூரி – சித்திரக்கதை - குமரேசன் முருகானந்தம் – பக். 25
7. இசை அல்லது இளையராஜா – யுகபாரதி – பக். 30
6. கதைகளின் வழியே ஜென் – கதைகளின் தொகுப்பு – கே. ஜி. ஜவர்லால் – பக். 200
5. வாழ்க்கையை மாற்றும் 35 புத்தகங்கள் – கட்டுரை தொகுப்பு – கிருஷ்ணகுமார் - பக். 128
4. ஏன் வாசிக்கவேண்டும்? – கட்டுரை தொகுப்பு அபிலாஷ் பக். 155
3. ஆதுரசாலை – நாவல் - உமர் பாரூக் – பக். 375
2. ரப்பர் வளையல்கள் - - சிறுகதை தொகுப்பு - சிவஷங்கர் ஜெகதீசன் பக். 119
1. பிசினஸ் சைக்காலஜி – கட்டுரை தொகுப்பு - சதீஷ் கிருஷ்ணமூர்த்தி - பக். 117
0 பின்னூட்டங்கள்:
Post a Comment