முதல் கடையில் போன ஆண்டு சாப்பாடு கிடையாது என்றார்கள். ஒன்லி பிரைடு ரைஸ் என்றார்கள். போச்சு!
இன்று மூன்றாவது கடைக்கு போனேன். அங்கும் சாப்பாடு இல்லை என்றார்கள். இன்னைக்கு மட்டும் இல்லையா? எப்பொழுதுமே இல்லையா? என்றதற்கு இன்னும் கொஞ்ச நாட்களுக்கு இல்லை என்றார்கள். ஏன் என்ன ஆச்சு? என துக்கம் விசாரித்தேன். சமைக்கிறவங்க இப்பொழுது இல்லை என்றார்கள்.
சோகமாய் இரண்டே இரண்டு சப்பாத்தி சாப்பிட்டு வந்துவிட்டேன். திரும்ப முதலில் இருந்து புது சாப்பாடு கடையை தேடி அலைய வேண்டியது தான்.
ஒரு வாரத்திற்கு முன்பு ஒரு தகவல் சொன்னார்கள். கடந்த ஆண்டு ஸ்விக்கி ஒரு நிமிடத்திற்கு 115 பிரியாணி ஆர்டர்கள் எடுத்தார்களாம். பிரியாணி ஆதிக்கம் அதிகமாகியிட்டே போகுது! இந்தியாவின் தேசிய உணவுக்கு மக்கள் கிட்ட வாக்கு கேட்டா, பிரியாணி தான் ஜெயிக்கும் போல!
நமக்கும் பிரியாணி மேலே வெறுப்பு கிடையாது. சாப்பிட்டா ஒரு மணி நேரத்திற்கு கிறக்கமா இருக்கு! வேலை பாதிக்குதுல்ல!
0 பின்னூட்டங்கள்:
Post a Comment