> குருத்து: மதுரை தெப்பக்குளம்

August 9, 2024

மதுரை தெப்பக்குளம்


நண்பர்களுடன் ஒருநாள் மதுரை தெப்பக்குளத்தில் நடுவில் இருக்கும் பகுதியில் இரண்டு மணி நேரம் பேசிக்கொண்டிருந்தோம். அப்பொழுது சுற்றிலும் தண்ணீர் இல்லாத வெயில் காலம்.


நான்கு நண்பர்களில் இருவர் ஆண்கள். இருவர் பெண்கள். யாரும் காதலர்கள் இல்லை. எதிரே இருந்த போலீசு நிலையத்தின் கண்கள் எங்களை கவனித்து கொண்டிருந்து இருந்திருக்கின்றன.

வீட்டிற்கு செல்ல பேருந்து நிறுத்தம் வந்த பொழுது... ஒரு போலீசு ஆண்கள் இருவரை மட்டும் அழைத்தார்கள்.

கொஞ்சம் அதட்டல், உருட்டலுடன் ஒரே அட்வைஸ் மழை. 20 வயதிலேயே போலிசின் முகம் தெரிந்ததால், அட போங்கடா! என சிரித்துக்கொண்டே வந்துவிட்டோம்.

இந்தப் படம் அந்த நிகழ்வை நினைவுப்படுத்திவிட்டது.

0 பின்னூட்டங்கள்: