ஒரு பிரபல நிறுவனத்தின் கார்ப்பரேட் அலுவலகம். பதினைந்து பேருக்கும் மேலான நபர்கள் வேலை செய்கிறார்கள். வழக்கம் போல அலுவலகம் இயல்பாக துவங்குகிறது. நிறுவனத்தின் முதலாளி வருகிறார். பேசிக்கொண்டிருக்கிறார். ஒரு விசயம் குறித்து விவாதிப்பதற்கு ஒரு கூட்டம் ஏற்பாடு செய்கிறார்கள்.
ஒரு காபி
தயாரித்து குடிக்க எந்திரத்துக்கு போகிறார். அவர் மேல் காபி சிந்துகிறது. (முதலாளியே
காபி தயார் செய்வாரா என்ன?) துடைப்பதற்காக
வாஷ்பேசின் உள்ள அறைக்குச் செல்கிறார். சில நிமிடங்களில் அவருடைய தொழில்முறை கூட்டாளி அழைக்கிறார் என்பதற்காக…
அலுவலக நிர்வாகி கதவைத் தட்டுகிறார். உள்ளிருந்து
பதில் வராததால், செக்யூரிட்டியிடம் இருந்து சாவி வாங்கி வந்து திறக்கிறார்கள். உள்ளே தலையில் அடிப்பட்டு, அந்த முதலாளி இறந்து
கிடக்கிறார்.
ASPயாக இருக்கும்
நாயகனான போலீசு படையுடன் வருகிறார். விசாரணையை துவக்குகிறார். இயல்பான மரணமா? கொலையா? என்ற அந்த விசாரணையில் தெரிய
வரும் சில மர்மங்கள் அவரை எங்கேயோ அழைத்து செல்கிறது. அதை சுவாரசியமாய் சொல்லியிருக்கிறார்கள். இரண்டாவது
பாகத்துக்கும் அடி போட்டிருக்கிறார்கள்.
****
மொத்தப்படத்தையும்
நுணக்கமாக எழுதி, அதை வெற்றிகரமாக படமும் ஆக்கியிருக்கிறார்கள்.
படம் முடியும்
பொழுது, ”இதில் காண்பிப்பது எல்லாம் நடைமுறையில் சாத்தியமா?” என என் மகள் திரும்ப திரும்ப
கேட்டுக்கொண்டே இருந்தாள்.
நாவலசிரியர்
அகதா கிறிஸ்டி 1900 களில் எழுதிய ஒரு நாவலால் ஈர்க்கப்பட்டு இந்தப் படம் எடுக்கப்பட்டிருப்பதாக
ஆங்காங்கே செய்தி கண்ணில்பட்டது. படக்குழு
ஒத்துக்கொள்கிறதா என தெரியவில்லை.
தமிழ் தெலுங்கு
படங்களின் பாதிப்பு நாயகன் ரஞ்சித் சஜீவ் தன் ஜிம் பாடியை ஆங்காங்கே காட்டுவதில் தெரிகிறது. ஆச்சர்யம் ஜோடியாக யாரையும் காட்டவில்லை. சித்திக்,
திலீஷ் போத்தன், மற்ற நடிகர்களும் நன்றாக துணை நின்றிருக்கிறார்கள். சம்ஜத் இயக்கியுள்ளார்.
முதல் படம் போலவே தெரியவில்லை.
அமேசானில்
வெளியாகியிருக்கிறது. திரில்லர் ரசிகர்கள் பாருங்கள்.
0 பின்னூட்டங்கள்:
Post a Comment