> குருத்து: ஒரு லிட்டர் பெட்ரோல் விலை இப்பொழுது ரூ.90 விரைவில் 100 ஐ எட்டிவிடும்!

February 21, 2021

ஒரு லிட்டர் பெட்ரோல் விலை இப்பொழுது ரூ.90 விரைவில் 100 ஐ எட்டிவிடும்!



ஒரு இந்திய குடிமகன் தான் சம்பாதிப்பதில் 30% (பத்து லட்சத்திற்கும் மேலாக) வரி கட்டவேண்டும். ஆனால், இந்த நாட்டில் கார்ப்பரேட்டுகளுக்கு வரி 22% கட்டினால் போதும். காரணம் கார்ப்பரேட்டுகளுக்கு இப்படி வரியை குறைக்காவிட்டால், தங்கள் நிறுவனங்களை எடுத்துக்கொண்டு பக்கத்து நாடுகளுக்கு ஓடிவிடுமாம்.

இப்படி கார்ப்பரேட்டுக்களுக்கு வரியை குறைப்பதால், நாட்டுக்கு மிகப்பெரிய வரி இழப்பு ஏற்படுகிறது. கொரானா ஊரடங்கு காலத்தில் பெரும்பாலோர் ஊதியம் இழந்து, தொழில் இழந்து வாழ்வா, சாவா என தவித்த பொழுது, 100 கோடீஸ்வரர்களின் சொத்து 15 லட்சம் கோடி சொத்து மதிப்பு கிடு கிடுவென உயர்ந்திருக்கிறது.
இப்படி நேரடி வரியை (Direct Tax) குறைத்த மத்திய அரசு தான், பெரும்பாலான மக்கள் பயன்படுத்தும் பெட்ரொல், டீசல் மீதான வரியை (indirect Tax) குறைக்க மறுக்கிறது. கூடுதலாக சாவுங்கடா! என பெட்ரோல் மீது ரூ 2.50யும், டீசல் ரூ.4யும் வேளாண் செஸ் வரியாக வசூலிக்க போகிறேன் என நம்ம நிதி அமைச்சர் நிம்மி இந்த பட்ஜெட்டில் அறிவித்துவிட்டார். வேளாண் செஸ்ஸாக வசூலித்தால் மத்திய அரசே வைத்துக்கொள்ளலாம். மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்க தேவையில்லை. இந்த அறிவிப்பை நம்ம முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியே எதிர்த்தார் என்றால், இது எவ்வளவு மோசம் என நீங்கள் கணக்கிட்டு கொள்ளலாம்.
நாமாவது பெட்ரோல் போடும் பொழுதெல்லாம், திட்டுவதற்கு ஞாபகப்படுத்தும் விதமாக பங்கிலேயே மோடி பேனரில் கோணலாய் சிரித்துக்கொண்டிருப்பார். இந்த சங்கிகளை நினைத்தால் தான் ஆச்சரியமாக இருக்கிறது. யாரை திட்டுவார்கள்?
#பின்குறிப்பு : படத்தைப் பாருங்கள். ஒரு லிட்டர் பெட்ரோல், டீசல் விலை ஜனவரி 1ந் தேதி 2021 அன்று தில்லியில் என்ன விலை? மத்திய மாநில அரசுகள் எவ்வளவு வரி விதிக்கிறார்கள் என்பதையும் நீங்கள் புரிந்துகொள்ளலாம். ஒரே நாடு ஒரே வரி என ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தும் பொழுது, ஆரவாரமாய் அறிவித்தார்கள். பெட்ரோல், டீசலை மட்டும் ஜிஎஸ்டியிலிருந்து நைசாக கழட்டிவிட்டார்கள்.

0 பின்னூட்டங்கள்: