தினசரி கையில் வந்து போகும் சில்லறைகளில், ஐந்து, பத்து கிடைக்கும். அதை உண்டியலில் போட்டு வருவோம்.
ஒவ்வொரு வருடமும் அண்ணன் குடும்பத்துடன் குற்றலாம் போகும் பொழுது, செலவுகளில் ஒரு பகுதிக்கு உண்டியல் கைகொடுக்கும்.
இந்த ஆண்டு கொரோனா வந்து, குற்றாலத்திற்கு யாரையும் போகவிடாமல் தடுத்துவிட்டது. குற்றால வரலாற்றில் தண்ணீர் வந்தும் குளிக்கவிடாமல் தடுத்தது இந்த முறையாகத்தான் இருக்கும்!
குற்றாலத்தை நாங்கள் கொஞ்சம் மறந்தாலும், உண்டியல் தான் அடிக்கடி ஞாபகப்படுத்திக்கொண்டே இருந்தது.
இன்றைக்கு எண்ணிப் பார்த்ததில், ரூ. 3000 க்கும் மேலே தேறியது! 2021ல் போவதற்கு பயன்படும்!
பிரிட்டனில் கொரானா புது அலை. ஊரடங்கு என்கிறார்கள். குற்றாலத்திற்கு பயன்படுமா? மீண்டும் ஊரடங்கில் சோத்துக்கு பயன்படுமா? ஒரே திகிலாக இருக்கிறது!
0 பின்னூட்டங்கள்:
Post a Comment