சென்னையில் வியாசைப் பகுதியில் இயங்கி வரும் டாக்டர் அம்பேத்கர் இரவு பாடசாலை ஏழை மாணவர்கள் படிப்பதற்காக ஒரு சிறு நூலகம் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தது. “அரசியல், பொருளாதாரம், பண்பாடு என எந்த தலைப்பில் இருந்தாலும் பரவாயில்லை. மாணவர்களுக்காக நீங்கள் படித்த புத்தகங்களை தாருங்கள்” என சமூக அக்கறை கொண்டவர்களிடம் கேட்டோம்.
சென்னையில் பல ஆண்டுகளாக வரி ஆலோசகராக (Tax Consultant) இயங்கி வருபவரான நாராயணசாமி அவர்கள் படிக்கும் மாணவர்களுக்கு ”படித்தப் புத்தகங்கள் ஏன்? புதிய புத்தகங்களே வாங்கித் தருகிறேன்” என முன்வந்தார்.
நமது பாடசாலையில் படித்து வரும் பள்ளி மாணவர்கள் அனைவரும் அரசுப் பள்ளிகளில் படித்துவருவதால், பள்ளியிலேயே புத்தகங்களை வழங்கிவிடுகிறார்கள். நமது பாடசாலையில் பயின்று வரும் சட்டக்கல்லூரி மாணவர்களுக்கு சட்டப்புத்தகங்கள் வாங்கித்தாருங்கள் என கேட்டுக்கொண்டதற்கு மகிழ்வுடன் வாங்கிக் கொடுத்தார். கூடுதலாக திருக்குறளை விளக்கும் பாடல்கள், கதைகள், நாடகங்கள் என மூன்று புத்தகங்கள் உட்பட சிறுவர்களுக்கான புத்தகங்களையும் வாங்கித்தந்தார்.
மாணவர்கள் சார்பாக புத்தகங்கள் வாங்கித் தந்த நாராயணசாமி அவர்களுக்கு நன்றி.
0 பின்னூட்டங்கள்:
Post a Comment