> குருத்து: வாசிப்பு இலக்கு!

February 18, 2021

வாசிப்பு இலக்கு!


திட்டமிடாமல் படிக்க ஆரம்பித்தால், படித்தே ஆகவேண்டிய சில புத்தகங்களை படிக்க தவறுகிறோம்.

ஆகையால், வருட துவக்கத்திலேயே படிக்க வேண்டிய புத்தகங்களை அரசியல், சமூகம், பண்பாடு என்ற அடிப்படையில் பிரித்து கொள்ளலாம் என யோசித்தேன்.

பட்டியலை எழுத துவங்கினால்..

"சித்தாந்த தெளிவு இல்லைன்னா இருட்டுல நடக்கிற மாதிரி தான்! எங்களை முதல்ல படி!" என தலையில் கொட்டுகின்றன.

"நாங்க வாங்கி ரெம்ப வருசங்களாச்சு! இனியும் எங்களைப் படிக்கலைன்னா கொன்றுருவேன்" என கையை முறுக்குகின்றன.

"எங்கேயோ இருக்கிற நாடுகளின் வரலாறை எல்லாம் படிக்கிற! சொந்த நாட்டு வரலாறு தெரியுமா சுத்தறீயே! வெட்கமாயில்ல!" என கோபப்படுகிறது.

மார்க்ஸ், ஹோசிமின் எல்லாம் என்னைப் பார்த்து புன்னகைக்கிறார்கள்.

"பண்பாடு இல்லைன்னா எல்லாமே போச்சு! என்னை முதல்ல படிக்கிறது தான் சரி" என்கிறது.

"எவ்வளவு பண நெருக்கடியில், இந்த புத்தகங்கள் வாங்குனீங்களே! இப்பவும் படிக்கலையே!" என நினைவுப்படுத்துகிறார்கள் குடும்பத்தில்!

இப்ப நான் என்ன செய்றது?

0 பின்னூட்டங்கள்: