> குருத்து: Chaser (2008) தென்கொரியா

October 1, 2020

Chaser (2008) தென்கொரியா


கதை. நாயகன் போலீசு வேலையை விட்டுவிட்டு, பெண்களை வைத்து விபச்சாரம் செய்கிறான். சமீபத்தில் இரண்டு பெண்கள் காணாமல் போகிறார்கள். இவனை விட்டுவிட்டு வேறு யாரிடமோ சென்றுவிடுகிறார்கள் என நினைக்கிறான்.

பிறகு, ஒருவன் இந்த பெண்களை வரவழைத்து, யாரிடமோ விற்றுவிடுகிறான் என சந்தேகிக்கிறான்.


திரும்பவும் அவனிடமிருந்து அழைப்பு வரும் பொழுது, தன்னிடம் இருந்த இன்னொரு பெண்ணை அனுப்பி, இடத்தை கண்டுபிடிக்க முயல்கிறான்.


அவன் ஒரு சைக்கோ கொலைகாரன் என அவன் வீட்டிற்கு போன பிறகு தான், தெரிகிறது. அங்கிருந்து தப்பிக்க முயல்கிறாள். அவளை நம்பி வீட்டில் ஒரு குட்டிப்பெண் காத்திருக்கிறாள்.


நாயகன் சைக்கோவை கண்டுபிடிக்க முயற்சி செய்ததில், பிடித்தும்விடுகிறான். போலீசு இரண்டு பேரையும் கைது செய்கிறது.


அதற்கு பிறகு போலீசு விசாரணையில் என்ன ஆனது? அந்த பெண் தப்பித்தாளா என்பதை பர பரவென எடுத்திருக்கிறார்கள்.


****


கொரியப் படங்களில் இந்தப் படம் நல்ல படம் என ஆங்காங்கே சிலர் எழுதி இருந்ததை வைத்து இந்தப் படம் பார்த்தேன்.


அந்த குட்டிப்பெண்ணின் அம்மாவை காப்பாற்றியே ஆகவேண்டும் என நாயகன் பரிதவிப்பை நன்றாக காட்டியிருக்கிறார்.


முன்னாள் போலீசு. இந்நாள் விபச்சார தரகன். இது நம்பத் தகுந்த மாதிரி இருக்கிறது. நம்மூர் போலீசும் கேடி, கிரிமினல்கள் என பலரிடம் பழகிக்கொண்டு தான் இருக்கிறார்கள். போலீசு வேலையை இழக்கும் பொழுது, தனக்கு தெரிந்த இன்னொரு தொழிலை மேற்கொள்வது சகஜம் தான். ஆனால் அந்த கதாப்பாத்திரம் பெண்ணை மீட்க போராடும் அவனின் பரிதவிப்பு எனக்கு என்னமோ ஒட்டவேயில்லை.


சைக்கோ கொலைகாரன் என அவனே ஒத்துக்கொண்ட பிறகும், அவனை போலீசு அடிக்காமல் இருப்பதும், சாட்சியம் இல்லை என விட்டுவிடுவதும் நம்பும்படியும் இல்லை. போலீசை இம்புட்டு நல்லவனா ஏன் சித்தரிக்கனும்? புரியவில்லை

0 பின்னூட்டங்கள்: