Erotic mystery psychological drama
- Stanley Kubrick Movie
கதை. ஒரு பிரபல இளம்மருத்துவர். தன் துணைவியார், மகள் குட்டிப் பொண்ணுடன் வாழ்ந்துவருகிறார். ஒரு பார்ட்டிக்கு கிளம்புகிறார்கள். அங்கு மருத்துவர் இரண்டு பெண் மாடல்களுடன் ஜாலியாக நீண்ட நேரம் பேசிக்கொண்டு இருக்கிறார். நிறைய போதையுடன் இருக்கும் மருத்துவரின் துணைவியாருடன் வேறு ஒரு ஆள் நடனம் ஆடிக்கொண்டே இனிக்க இனிக்க பேசுகிறார். ஒரு வழியாக வீடு வந்து சேர்கிறார்கள்.
வீட்டில் கொஞ்சம் போதை ஏற்றிக்கொண்டு பார்ட்டியில் நடந்த விசயம் குறித்து பேசும் பொழுது, இருவருடைய அந்தரங்கம் குறித்து பேச்சு எழுகிறது. விவாதத்தின் ஒரு இடத்தில் சில வருடங்களுக்கு முன்பு ஒரு சந்திப்பில் ஒரு கப்பல் அதிகாரியை பார்த்தேன். அவனோடு காதல் கொண்டேன். அவன் ஒருவேளை "கிளம்பி வா!" என சொல்லியிருந்தால், உன்னை, பிள்ளையை விட்டுவிட்டு போயிருப்பேன். நல்லவேளை அதற்கு பிறகு அவன் என்னை அழைக்கவில்லை என்கிறாள். தன் மீது மிகவும் அன்பு கொண்டவள் இப்படி சொன்னது அவனை நிறைய கலக்கமடைய வைக்கிறது.
அப்பொழுது அவருடைய பேஷண்ட் ஒருவரி இறந்த செய்தி வருகிறது. இவள் சொன்னதை நினைத்துக்கொண்டே செல்கிறான். திருமண வயதில் இருக்கும் அவளுடைய மகளுக்கு ஆறுதல் சொல்லும் பொழுது, திடீரென மருத்துவரை காதலிப்பதாக சொல்கிறாள். அவளிடம் நாசூக்காக சொல்லி, அங்கிருந்து கிளம்புகிறான்.
நடந்து சொல்லும் பொழுது, ஒரு பிராஸ்ட்யூட்டை சந்திக்கிறான். அவள் வீட்டிற்கு சென்று கொஞ்ச நேரம் பேசிக்கொண்டு இருக்கிறான். அங்கிருந்தும் கிளம்புகிறான். பிறகு, இசைக்கலைஞனான தன் நண்பனை ஒரு பாரில் பார்க்கிறான். அப்போழுது அவனுக்கு போன் வருகிறது. ஒரு பாஸ்வேர்ட் சொல்கிறார்கள். ஒரு வித்தியாசமான விழா. அங்கு தான் கண்ணைக் கட்டிக்கொண்டு பியானோ வாசிப்பேன் என்கிறான். இவன் இருக்கும் மனநிலையில் ஆர்வமாக விசாரிக்கிறான். முதலில் மறுத்தாலும், பிறகு சொல்கிறான்.
அங்கு ஒரு டாக்ஸியில் கிளம்புகிறான். ஒரு பெரிய பங்களா. பாஸ்வேர்ட் சொல்லி உள்ளே சென்றுவிடுகிறான். நவநாகரிக உடைகளுடன் எல்லோரும் விதவிதமாக முகமூடி அணிந்திருக்கிறார்கள். அங்கு சடங்குகள் செய்ய துவங்குகிறார்கள்.
அதன்பிறகு அங்கு நடப்பது எல்லாம் விநோதமாக இருக்கிறது. ஒரு பெரிய சிக்கலில் மாட்டிக்கொள்கிறான். அங்கிருந்து தப்பித்தானா? துணைவியாருடனான மனக்கசப்பு என்ன ஆயிற்று? என்பதை சொல்லியிருக்கிறார்கள்.
***
புகழ்பெற்ற இயக்குநர் ஸ்டான்லி குப்ரிக்கின் படமிது. இறுதிப்படமும் இதுதான். அவருடைய இயக்கத்தில் அதிக நாட்கள் படபிடிப்பு நடந்ததும் இந்தப்படம் தான் என்கிறார்கள். Shining படத்தை பயந்து பயந்து பார்த்த பிறகு, இப்பொழுது அவருடைய அடுத்தப் படத்தைப் பார்க்கிறேன். டாம் குரூஸ் தன் ரியல் துணைவியாருடன் படத்தில் தம்பதிகளாக நடித்திருக்கிறார்கள். படம் நன்றாக வரவேண்டும் என தம்பதிகளுக்குள் இருந்த முரண்பாட்டை குப்ரிக் தூண்டிவிட்டார் என சொல்கிறார்கள். உண்மையா என தெரியவில்லை. ஆனால், படம் வெளிவந்து இரண்டு வருடங்கள் கழித்து, பிரிந்துவிட்டிருக்கிறார்கள்.
ஒரு நாள் இரவு துணைவியாருடனான வாதத்தில் கொஞ்சம் சிக்கலாகி, அந்த குழப்பமான மனநிலையில் அடுத்து அடுத்து என்னென்ன நடக்கிறது என்பது தான் படம். அதை குப்ரிக் தன் ஸ்டைலில் சொல்லியிருப்பது ஒரு அனுபவம். பொண்டாட்டியோடு தண்ணியோ போதையோ ஏத்திக்க கூடாது என்பது படம் சொல்லும் பாடம்.
மற்றபடி படத்தில் பெரியவர்களுக்கான விசயங்கள் நிறைய இருக்கிறது. ஆகையால், குடும்பத்தோடு பார்க்க வாய்ப்பில்லை. அமேசான் பிரைமில், நெட் பிளிக்சில் இருப்பதாக நண்பர்கள் சொன்னார்கள். தேடிப் பாருங்கள்.
0 பின்னூட்டங்கள்:
Post a Comment