80களில் கதை நடக்கிறது. நாயகன் சிறுவயதில் இருந்து துப்பறியும் படங்களை ஆர்வமாய் பார்த்துவருகிறார். தான் ஒரு துப்பறிவாளராக ஆகவேண்டும் என்பது கனவு. அப்பா போலீஸ். வாழ்க்கையில் கிடைத்ததோ கான்ஸ்டபிள் வேலை. இருப்பினும் எதைச்சையாய் ஒரு வழக்கை விசாரிக்க சொல்லி இன்ஸ்பெக்டர் சொல்கிறார். அதை கொஞ்சம் மெனக்கெட்டு அந்த வழக்கை முடித்துவைக்கிறான். ஸ்டேசனில் நல்ல பெயர் கிடைக்கிறது.
ஸ்டேசனில் லாக்கரில் பூட்டி வைத்திருந்த பணம் காணாமல் போகிறது. எந்த துப்பும் கிடைக்கவில்லை. மர்மமாக இருக்கிறது. அதே போல இன்னொரு ஸ்டேசனிலும் நடக்கிறது. உயர் அதிகாரிகளுக்கு தெரிந்தால், வேலை போய்விடும். ஆகையால், ரகசியமாய் விசாரிக்க சொல்லி, நாயகனிடம் பொறுப்பை ஒப்படைக்கிறார் இன்ஸ்பெக்டர். மூன்றாவது ஸ்டேசனில் இவனே அந்த ஸ்டேசன் இன்ஸ்பெக்டரோடு இரவு முழுவதும் காவல் காக்கிறான். காலையில் பார்த்தால் பணம் காணாமல் போகிறது. திகைத்துப் போய்விடுகிறார்கள்.
இடையில் காதல் கண்ணை மறைக்கிறது. பிறகு மேலதிகாரி நெருக்குதலுக்கு பிறகு உண்மைகளை கண்டுபிடித்தாரா என்பது மீதிக்கதை.
*****
சமீபத்தில் Kirik Party என ஒரு கன்னடப்படம் பார்த்தேன். கல்லூரியை களமாக
வைத்து எடுக்கப்பட்ட படம். அந்த படம் அங்கு பெரிய வெற்றி பெற்றது. இதன்
இயக்குநர் தான் இந்தப் படத்தின் நாயகன் Rishab Shetty. சேரன், பிரசன்னா
நடித்த முரண் படத்தின் நாயகி இந்தப் படத்தில் வருகிறார் ஹரிப்பிரியா.
ரசிக்க வைக்கிறார்.
முண்டாசுப்பட்டி போல ஒரு நகைச்சுவைப் படம். ஆனால், முண்டாசுப்பட்டியை நன்றாக ரசிக்க முடிந்தது. இந்தப் படம் வெற்றி பெற்றிருந்தாலும், பெரிதாக ரசிக்கமுடியவில்லை. நகைச்சுவை படம் என்பதால், லாஜிக் பெரிசா பார்க்க தேவையில்லை என நினைத்தார்கள் போலிருக்கிறது. பல இடங்களில் ஒட்ட முடியவில்லை. இந்தப் படத்தின் வெற்றியில் இந்தியில் அக்ஷய்குமார் நடிக்கிறார். தமிழில் கிருஷ்ணா நடிக்கிறாராம். கொஞ்சம் பயமாகத்தான் இருக்கிறது.
மெனக்கெட்டு பார்க்கவேண்டியதில்லை. வாய்ப்பு இருந்தால், நிறைய நேரம் இருந்தால், பாருங்கள்.
0 பின்னூட்டங்கள்:
Post a Comment