> குருத்து: வீட்டு சாப்பாடு

May 3, 2020

வீட்டு சாப்பாடு


தாம்பரம் தாண்டி முடிச்சூருக்கு அருகே வேலை நிமித்தம் போய்வருவேன்.
ஆர்டருக்காக காத்திருந்த ஒரு ஸ்விக்கி இளைஞரிடம் "சாப்பிட ஏதாவது கடை சொல்லுங்கள்" என்றேன்.

அருகிலேயே கூட்டு ரோடு அருகே கடையை கைகாட்டி "நன்றாக இருக்கும்" என்றார்.

பந்தல் போட்ட அந்த சிறு கடையில் நான்கு பெண்கள் மாறி மாறி பரிமாறிக்கொண்டிருந்தார்கள்.

ஒரு கூட்டு, ஒரு பொரியல், சாம்பார், காரக்குழம்பு, ரசம், மோர் என எல்லாம் சுவையாக இருந்தது. தேவையானதை சாப்பிடலாம். 65 ரூ. பார்சலுக்கு கூடுதலாக ரூ 5 வாங்குகிறார்கள். கூடுதல் விலையில் வறுத்த மீனும், ஆம்லேட்டும் கிடைக்கிறது.

பேச்சுக்கொடுத்தேன்.

"அதென்ன வீட்டுச் சாப்பாடு?"

"ஊரிலிருந்து நல்ல புளி வருது. மசாலா பொடி வீட்டிலேயே தயாரிக்கிறோம். அன்லிமிடெட் சாப்பாடு என்பதால் சோடா சேர்க்க மாட்டோம்" என இயல்பாக பதில் சொன்னார்.

"எத்தனை வருசமா நடத்துகிறீர்கள்?"

"ஒன்றரை வருசமா!" என்றார்.

பார்த்து கேட்டு பரிமாறுவதிலும் கவனமாக இருந்தார்கள்.

சாப்பிட்டு முடிந்ததும்... பேஸ்புக்கில் உங்க கடையைப் பத்தி எழுத போறேன். போட்டோ எடுத்துக்கொள்ளவா? என்றேன்.

"நல்லபடியா போடுங்க!" என்றார்.

மாலை 6.30 மணிக்கே பசி எடுக்க ஆரம்பித்தது!

உண்மையிலேயே வீட்டுச் சாப்பாடு தான்!

0 பின்னூட்டங்கள்: