> குருத்து: அட்வைஸ் வாரம்!

May 3, 2020

அட்வைஸ் வாரம்!

கடந்த ஒரு வார காலமாக வருடத்திற்கு ஒருமுறை கடைப்பிடிக்கிற "சாலை பாதுகாப்பு வாரம்" என பரவலாக விளம்பரப்படுத்தி வருகிறார்கள்.

பெயரிலேயே குழப்பம் இருக்கிறது. "சாலை பயணிகள் பாதுகாப்பு வாரம்" என்பது தான் பொருத்தமானது. இதனால் தான், பொறுப்பே இல்லாமல் வண்டி ஓட்டும் பொழுது குறுக்கே லத்தியை நுழைத்து, சாகடிக்கிறார்கள்.
அரசுக்கு மக்கள் மீது அக்கறை எல்லாம் இருந்தால் தானே! அப்படியெல்லாம் யோசிக்க போகிறார்கள்.

சாலை பாதுகாப்பு வாரத்தை துவக்கி வைத்து அதிமுக அமைச்சர் பேசும்போது "சாலைகள் எல்லாம் அருமையாக இருப்பதால் வண்டியில் செல்பவர்கள் ஓட்டி செல்லாமல் பறக்கிறார்கள். அதனால்
நிதானமாக செல்லுங்கள்" என அறிவுரை வழங்கினார்.
சிரிப்பு வந்துவிட்டது. கடந்த முறை ஊருக்கு செல்லும்போது ஆட்டோ ஓட்டுனரிடம் பேச்சு கொடுத்தேன். "ரோட்டை பாருங்க சார்! எவ்வளவு குண்டும் குழியுமா இருக்கு! அரசு ஒழுங்கா ரோடும் போட மாட்டேங்குது! அதை பாதுகாக்கவும் மாட்டேங்குது! கமிசன் அரசாங்கம் சார். கர்ப்பிணிப் பெண்களை அழைத்து செல்லும் பொழுது அவ்வளவு கஷ்டமாயிரும் சார்!" என சாலைகளின் தகுதி பற்றி கழுவி கழுவி ஊற்றினார்.
இரண்டு நாட்களுக்கு முன்பு திருமங்கலத்தை கடக்கும் போது ஹெல்மெட் போடாத ஆட்களை பிடித்து வைத்து, ஒரு போலீஸ் அதிகாரி அறிவுரைகளை அள்ளி விட்டுக்கொண்டிருந்தார்.

அபராதத்துடன், அட்வைசுமா? அல்லது அட்வைசே அபராதம் என்பதால் அப்படியே அனுப்பி விடுவார்களா? என தெரியவில்லை.

தெருவுக்கு தெரு சாராயக் கடைகளைத் திறந்து வைத்துக் கொண்டு...
சாலைகளை மோசமாக வைத்துக்கொண்டு...
மக்களுக்கு அட்வைஸ் பண்ணுவது எல்லாம் ரொம்ப அநியாயம்.
நீங்க என்ன நினைக்கிறீங்க?

0 பின்னூட்டங்கள்: