ஒரு கலகலப்பான பாடலில் இருந்து துவங்குவோம்.
நண்பர் குழுவில் யாராவது ஒருவர் சாப்பாட்டு பிரியராக இருக்க பார்த்திருக்கிறேன். எந்தெந்த உணவு எங்கெங்கு ருசியாக இருக்கும் என சப்புக்கொட்டி கட கடவென சொல்வார்கள். சொல்லும் பொழுது நமக்கும் வாய் ஊறும்.
இப்படி ஊருக்கு ஊரு புகழ் பெற்றிருக்கும் உணவுவகைகளை பழனிபாரதி அருமையாக பட்டியலிட்டு இருப்பார். அவைகளை நுணுக்கமாய் காட்சியும் படுத்திருப்பார் இயக்குனர் பிரகாஷ் ராஜ்.
தமிழ்ப்படங்களில் உணவு குறித்த பாடல்கள் அத்திப்பூத்தாற் போல அபூர்வம். அதுவும் கேட்பதற்கு இதமாய் அமைவதும் அபூர்வம்.
'உன் சமையலறையில்' படத்தில் இளையராஜா வடிவமைத்த இந்த பாடல் மிகவும் பிடித்த பாடல்.
மற்றபடி ஒரு இலக்கை நோக்கி பயணிப்பவர்கள் உணவின் ருசியை கொஞ்சம் கவனமாய் தள்ளிவைக்கத்தான் வேண்டும்! இல்லையெனில் உணவின் பிடியில் சிக்கிகொள்வீர்கள். 

0 பின்னூட்டங்கள்:
Post a Comment