> குருத்து: இனிவரும் தலைமுறைக்கு இவ்விட வாழ்க்கை சாத்தியமோ!

March 29, 2020

இனிவரும் தலைமுறைக்கு இவ்விட வாழ்க்கை சாத்தியமோ!

மக்களின் கோரிக்கைகளுக்காக போராடும் இயக்க மேடைகளில் பாடல்கள் பாடப்படுவதுண்டு!

அப்படி கேரளாவில் ஆதிவாசி மக்களுக்காக போராடும் மேடையில் பாடிய பாடல் இது!

இஞ்சக்காடு பாலச்சந்திரன் எழுதிய பாடலை ரெஷ்மி சதீஷ்-ன் குரல் எந்தவித இசையும் இல்லாமல் தனித்து ஒலிக்கிறது!

"இனிவரும் தலைமுறைக்கு இங்கே வாழ்க்கை சாத்தியமா?"
என தொடங்கும் பாடல்....

"பெரிய அணைகள், அணு உலைகள், யுத்தங்கள் இனி நமக்கு வேண்டாம் என்று ஒருமனதாய் சொல்லலாம்!

வளர்ச்சி என்பது மனதின் எல்லையை விவரிப்பதில் தொடங்கலாம்!
வளர்ச்சி என்பது நன்மை பூக்கும் உலகை உருவாக்க ஆகலாம்!"
....என முடிவடைகிறது.

வளர்ச்சி என்றால் என்ன? என்பதை இந்திய ஆட்சியாளர்களுக்கு கற்றுத்தருகிறது!


குறிப்பு : பாடலை பாடும் ரெஷ்மி சதீஷ் இயக்கம் சார்ந்தவர் இல்லை. தொடர்ந்து படங்களில் பாடிவருகிறார்.

1 பின்னூட்டங்கள்:

அ. வேல்முருகன் said...

ஆகச் சிறந்த அறிமுகம். மொழி எதுவாயினும் கேள்வி ஒன்றே. அது மக்களை நோக்கியா ஆட்சியாளர்களை நோக்கியா