"Sometimes dead is better"
கதை. அந்த சிறு நகருக்கு மருத்துவர் தனது மனைவி, ஒன்பது வயது மகள், குட்டி பையன், பூனையோடு மாற்றலாகி வருகிறார்.
அந்த அமைதியான பகுதியில் வீட்டருகே செல்லப் பிராணிகளை புதைக்கும் ஒரு இடுகாடு இருக்கிறது.
வந்த சில நாட்களில் அவர்களின் செல்லப்பூனை விபத்தில் இறந்துவிடுகிறது. புதைக்க போகும் பொழுது, பக்கத்து வீட்டு பெரியவர் "உன் பொண்ணுக்கு இந்த பூனையை ரெம்ப பிடிக்குமல்லவா! என கொஞ்சம் தள்ளிப்போய் புதைக்கிறார்.
அடுத்த நாள் எதுவுமே நடக்காதது போல பூனை வீட்டுக்கு வந்துவிடுகிறது. திகிலாகிறார்கள். அதன் இயல்போ மிக ஆக்ரோசமாக இருக்கிறது. காயங்களையும் ஏற்படுத்துகிறது. தொல்லையே வேண்டாம் என தொலைதூரத்தில் போய் விட்டுவிட்டு வந்துவிடுகிறார்.
மகளின் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் பொழுது, அந்த பூனை வீடு நோக்கி வந்துகொண்டிருக்கிறது. மகள் அதனுடன் பேசிக்கொண்டு இருக்கும் பொழுது, ஒரு கோர விபத்து ஏற்படுகிறது.
அதற்கு பிறகு ஏற்படும் கடுமையான மன உளைச்சலினால்.. மருத்துவர் ஆபத்தான முடிவு எடுக்கிறார். அது பல பிரச்சனைகளை கொண்டு வருகிறது.
அதிலிருந்து மீண்டார்களா என்பது முழு நீள திகில் கதை.
***
Stephen King 1983ல் எழுதிய நாவல் இது. 1989ல் படமாக்கி கல்லா கட்டியிருக்கிறார்கள். 30 ஆண்டுகள் கடந்துவிட்டதால், மீண்டும் எடுத்திருக்கிறார்கள்.
ஒரு பிரியத்துக்குரிய உறவின் இழப்பு எவ்வளவு வலியைத் தரும்? அதை ஈடு செய்ய எந்த எல்லைக்கும் செல்வார்கள் என்பது தான் படம் சொல்ல வருகிற செய்தி.
அந்த பெண், பூனை இருவரும் அசத்தல். மற்றவர்களும் இயல்பாக வருகிறார்கள்.
தமிழிலும் கிடைக்கிறது. பாருங்கள்.
0 பின்னூட்டங்கள்:
Post a Comment