கதை. Tony Stark இறந்த துக்கத்தில் இருந்து ஸ்பைடர் மேன் இன்னும் விடுபடவில்லை. உலகத்தை காக்கும் பஞ்சாயத்துகளில் இருந்து சற்று விலகி இருக்க விரும்புகிறான்.
தன் பள்ளி குழுவுடன் ஐரோப்பா சுற்றுலா செல்கிறான். பாரிஸ் ஈபிள் கோபுரத்தின் உச்சியில் வைத்து தன் அழகான காதலை தன் காதலியிடம் சொல்ல ஆசைப்படுகிறான்.
இதற்கிடையில் டோனி தன் வாரிசாக ஸ்பைடர்மேனை நினைத்து, ஆயுதங்களை இயக்கும் கண்ணாடியை ஸ்பைடர் மேனிடம் ப்யூரி ஒப்படைக்கிறார்.
ஐரோப்பாவிலும் பஞ்சபூத எதிரிகள் நாசத்தை விளைவிக்கிறார்கள். ஸ்பைடர்மேனும், புதிதாக வந்துள்ள சூப்பர் ஹீரோவும் இணைந்து சமாளிக்கிறார்கள்.
புதிய நபரின் நம்பிக்கையான பேச்சை, செயல்பாடுகளை பார்த்து டோனியினுடைய கண்ணாடியை ஒப்படைக்கிறான்.
பெரிய ஆபத்து அங்கிருந்து தான் துவங்குகிறது. அந்த ஆபத்திலிருந்து மீண்டானா என்பது மிகப்பெரிய போராட்ட கதை.
****
16 வயது என்பது அழகான இளம் வளர்பருவம். இந்த வயதில் உங்களை உலகத்தை காக்க சொன்னால் போங்கைய்யா என்றுதானே எல்லோரும் சொல்லுவோம். அந்த மன நிலையில் தான் ஸ்பைடர் மேனும் இருக்கிறான்.
டோனி இறந்த துக்கம், பொறுப்புகள் நிறைய இருக்கிறது தான் காதலிப்பது சரியா? தவறா? போன்ற தயக்கத்தை ஸ்பைடர்மேன் நன்றாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
இந்த படத்தை பொறுத்த வரைக்கும் டோனியின் ஆயுதபலம் தான் நாயகன். அது தான் வில்லனும் கூட!
இடைவேளை வரை கொஞ்சம் மெதுவாக சென்றாலும் இடைவேளைக்கு பிறகு பரபரப்பாக போகிறது. பார்க்கக்கூடிய படம் தான். பாருங்கள்.
0 பின்னூட்டங்கள்:
Post a Comment