கதை. 1462. டிரான்சில்வேனியா. Dracula என்ற மன்னன் கடுமையான போரில் தன் எதிரிகளுடன் போரிட்டு வெல்கிறான். அவனைப் பழி வாங்குவதற்காக அவன் காதலியிடம் அவன் இறந்துவிட்டதாக செய்தி சொல்கிறார்கள். மனமுடைந்த அவள் தற்கொலை செய்து கொள்கிறாள்.
மன்னன் பெரும் துயரம் அடைகிறான். மதகுருமார்கள் தற்கொலை செய்து கொண்டதால் அவன் காதலி சொர்க்கத்திற்குப் போக முடியாது என்கிறார்கள். செம கடுப்பாகி கடவுளுக்கு எதிராக சபதம் எடுக்கிறான். ரத்த காட்டேரி ஆகிறான்
1897. இறந்து போன காதலி லண்டனில் மீண்டும் பிறந்து இளம் பெண்ணாக வாழ்கிறாள். தன் காதலிக்காக லண்டனுக்கு தன் ஜாகையை மாற்றுகிறான். அவளை அடைய முயல்கிறான்.
அங்கு வேன்ஹெல்சிங் தன்னுடைய ஆட்களுடன் டிராகுலாவை எதிர்கொள்கிறார். இறுதியில் என்ன ஆனது என்பது முழுநீள கதை.
****
டிராகுலா வரிசைப் படங்களில் இந்த படம் முக்கியமானது என்கிறார்கள். உண்மைதான். படத்தின் தொழில்நுட்ப அம்சங்கள் பலவும் நேர்த்தியாக இருக்கின்றன. ஒப்பனை, ஒலி, ஆடை அலங்காரம் என மூன்று பிரிவுகளில் ஆஸ்கார் வென்றிருக்கிறது. வேறு பல விருதுகளையும் பல பிரிவுகளுக்காக வென்றிருக்கிறது.
வில்லன் தான் டிராகுலா. இருப்பினும் அவனுக்கும் ஒரு ஆழமான காதல் இருக்கிறது என்பதை அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
டிராகுலா எப்படி உருவானான் என்பதை அறிந்துகொள்ள முடிகிறது. படம் முழுவதும் டிராகுலா தான் பரவியிருக்கிறார்.
தற்கொலை செய்துகொண்டால் சொர்க்கம் கிடையாதா? அதற்கு ஏதும் பரிகாரம் கூட கிடையாதா? :)
தமிழிலும் கிடைக்கிறது. பாருங்கள்.
0 பின்னூட்டங்கள்:
Post a Comment