//ஐம்பதுகளை ஹிட்ச்காக்கின் காலம் எனலாம். அவரின் சிறந்த படங்கள் இந்த காலகட்டத்தில் வரிசையாக வெளியாயின. ஹிட்ச்காக்கின் சிறந்த படைப்புகளான ஸ்டேஜ் ப்ரைட், ஸ்ட்ரேன்ஜர்ஸ் ஆன் ஏ ட்ரெய்ன், டயல் எம் ஃபார் மர்டர், ரியர் விண்டோ, டு கேட்ச் ஏ தீஃப், த ராங்க் மேன், வெர்ட்டிகோ, நான் பை நார்த் வெஸ்ட் ஆகிய படங்கள் ஒன்றன் பின் ஒன்றாக வெளியாகி பாக்ஸ் ஆஃபிஸை கலகலக்க வைத்தன.//
ஒரு கட்டுரையிலிருந்து...
****
கதை. ஒரு புலனாய்வு புகைப்படக்காரர் ஒரு விபத்தின் காரணமாக ஒரு கால் உடைந்து, மாவு கட்டுப்போட்டு தனது அடுக்குமாடி வீட்டில் ஓய்வில் இருக்கிறார்.
வெயில் காலம் என்பதால் பல வீடுகளின் ஜன்னல்கள் திறந்து இருக்கின்றன. வேறு எங்கும் நகரமுடியாததால், பக்கத்து வீடுகளை வேடிக்கை பார்க்க ஆரம்பிக்கிறார்.
ஒவ்வொரு வீட்டின் மனிதர்களும் வேறு வேறு இயல்பு கொண்ட மனிதர்களாகவும், அவர்களது செயல்பாடுகள் சுவாரசியமாகவும் இருக்கின்றன.
அப்படி ஒரு குடும்பத்தில் ஒரு வயதான நபரும் இளம் மனைவியும் வாழ்கிறார்கள். அவர்களுக்குள் ஒற்றுமை இல்லை. அங்கு நடக்கும் சந்தேகத்துக்குரிய சம்பவங்கள் அவர் தன் மனைவியைக் கொலை செய்துவிட்டதாக நாயகன் சந்தேகப்படுகிறார்.
காதலியிடம் சொல்கிறார். துப்பறியும் தன் நண்பனிடம். சொல்கிறார் எல்லோரும் நம்ப மறுக்கிறார்கள்.
அந்த வீட்டில் என்ன நடந்தது? என்பதை முழு நீள கதையாகச் சொல்கிறார்கள்.
****
ஒரு சிறுகதையை எடுத்துக்கொண்டு, இரண்டு மணி நேர படமாக போரடிக்காமல் எடுப்பது இயக்குனர் ஹிட்ச்காக்கின் திறமைதான்.
புகைப்படம் எடுக்கும் நாயகனுக்கும் ஆடம்பரமான வாழ்க்கை வாழும் நாயகிக்கும் எளிமையான வாழ்க்கைக்கும், ஆடம்பரமான வாழ்க்கை குறித்தான உரையாடல் சுவாரசியமானது.
நாயகி அடுத்தவர்களுடைய வாழ்வை எட்டிப்பார்ப்பது நாகரிகம் இல்லை என வாதாடுவார். ஒரு கொலையைப் பற்றி ஆய்வு செய்கிறேன் என்பார் நாயகன். எட்டிப்பார்க்க கூடாது என்கிற கண்ணோட்டம் நம்மில் பலருக்கும் இருப்பதில்லை.
தமிழில் கிடைக்கிறது. பாருங்கள்.
0 பின்னூட்டங்கள்:
Post a Comment