இயற்கை' அவ்வளவு பிடித்தது. புகழ்பெற்ற “வெண்ணிற இரவுகள்” கதையை அடிப்படையாக கொண்டது என்றார்கள். படத்தில் அவ்வளவு நுணுக்கமான விவரங்கள். இயக்கம். பாடல்கள். எல்லாம் பிடித்தது. காதல் வந்தால் சொல்லி அனுப்பு இப்பொழுதும் அடிக்கடி கேட்ககூடிய பாடல். நாயகி சாமை திருமணம் செய்யாமல், அருண்விஜயுடன் சேரும் பொழுது ஏகப்பட்ட கோபம் எனக்கு. ஆனால் அதை தான் 'இயற்கை' எனும் பொழுது கடுப்பாய் இருந்தது.
மருத்துவ துறையில் எளிய மனிதர்களை அவர்களுக்கு தெரியாமலேயே சோதனை எலிகளாக பயன்படுத்துவதை அம்பலப்படுத்தி "ஈ"யாக எடுத்த பொழுது கவர்ந்தார்.
பிறகு ரசிய பின்னணியில் பெண் வீராங்கனைகள் அதி நவீன ஆயுதங்களுடன் ஜெர்மானிய படையை எதிர்த்து நின்ற "அதிகாலை அமைதியில்" நாவலை தமிழில் "பேராண்மை"யாக மாற்றி வெற்றிப்படமாக எடுத்தப் பொழுது ஆச்சரியப்படுத்தினார்.
"புறம்போக்கு"ல் கொஞ்சம் பிசகியது. ”லாபம்” படத்தின் மூலம் மீண்டும் எழுந்து வருவார் என நினைத்துகொண்டிருந்தேன்.
கடந்த காலங்களில் முற்போக்கு இயக்குனர்கள் எடுத்த பெரும்பாலான படங்களில் வெகுஜன மக்களை ஈர்ப்பதற்கான அம்சங்கள் மிக குறைவாக இருக்கும். அதனாலேயே படங்கள் வணிகரீதியாக வெற்றி பெறாது. அதை காரணம் காட்டி, சமூக அக்கறைப் படங்கள் எடுப்பது அபூர்வமாகிவிடும். இயக்குனர் ஜனநாதன் அந்த குறையை தீர்த்தார் என்றே சொல்வேன். இன்னும் பல படங்களை எதிர்பார்த்துக்கொண்டிருந்த பொழுது, மறைந்துவிட்டார்.
அவருடைய இழப்பு நமக்கெல்லாம் பேரிழப்பு. அவருக்கு நமது அஞ்சலி.
முகநூலில்.... 15/03/3021
0 பின்னூட்டங்கள்:
Post a Comment