> குருத்து: The Equalizer (2014) ஆக்சன் திரில்லர்

May 27, 2021

The Equalizer (2014) ஆக்சன் திரில்லர்


கதை. நடுத்தர வயதை கடந்த நாயகன். குடும்பம் இல்லை. தனியனாக வாழ்கிறார். ஒரு தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார். உடனிருப்பவர்களுக்கு உதவக் கூடியவராயிருக்கிறார். நடுநிசியில் ஒரு ரெஸ்டாண்டுக்கு போய் நாவல் படிப்பது வழக்கமாக இருக்கிறது.


அங்கு ஒரு இளம்பெண்ணும் தொடர்ந்து வருகிறாள். அவளுக்கு பாடகியாக ஆசை. ஆனால், ஒரு ரசிய மாபியா கும்பல் ப்ராத்தலுக்கு கட்டாயப்படுத்துகிறார்கள். அவளும் வேறு வழியில்லாமல் வேண்டா வெறுப்பாய் செய்கிறாள். அவள் ஒத்துழைக்க மறுக்கிறாள் என மோசமாக தாக்கி, ஐசியூவில் இருக்கிறாள்.

இதைக் கேள்விப்பட்டு நாயகன் போய்ப் பார்க்கிறார். நடந்ததை விளக்கமாக சொல்கிறாள் அவள் தோழி. நேரே அந்த கும்பலின் தலைவனிடம் பேசி அவரால் முடிந்த பணத்தை கொடுத்து அவளை விட்டுவிட சொல்கிறார். அவர்கள் அவரை கேலி செய்கிறார்கள். அங்கு ஒரு களேபரம் நடக்கிறது.

அந்த மாபியா கும்பல் அவர் யார்? அவரை கொல்லவேண்டும் என கொலைவெறியோடு தேடுகிறார்கள். பிறகு என்ன ஆனது என்பதை அதிரடி ஆக்சன் காட்சிகளுடன் சொல்லியிருக்கிறார்கள்.
***

பெரிய ஆர்ப்பாட்டம் இல்லாத, அடக்கமான திரில்லர். மாபியா கும்பலின் வேர் யார்? என தெரிந்துகொள்ள முன்பு வேலை செய்தவரிடம் போய் கேட்பார். இப்படி சிக்கலில் மாட்டியிருக்கும் ”அவனுக்கு உன்னால் உதவ முடியுமா?” என உடனிருப்பவர் கேட்பார். “அவன் உதவி கேட்டு வரல்ல! அனுமதி கேட்டு வந்திருக்கான்” என்பார் அந்த அம்மிணி. இப்படி பில்டப் வசனம் எல்லாம் கொஞ்சம் அடக்கமாய் உண்டு.

மற்றபடி, ரசியாவை எப்பொழுதும் அமெரிக்க திரையுலகம் மோசமாக தான் காட்டியிருக்கிறது. இதிலும் அது தொடர்ந்திருக்கிறது. மற்றபடி, அமெரிக்க உளவுத்துறை உலகம் முழுவதும் செய்த அத்தனை அட்டூழியங்களும் மெல்ல நினைவுக்கு வந்து போவதை தவிர்க்கமுடியவில்லை.

நாயகன் தன் பாத்திரத்திற்கேற்ற
அருமையான
பொருத்தம். மற்றவர்களும் நன்றாக செய்திருக்கிறார்கள். பாருங்கள்.

0 பின்னூட்டங்கள்: