> குருத்து: ஹெல்மெட்

May 27, 2021

ஹெல்மெட்


சட்டம் போடுவதற்கு முன்பிருந்தே ஹெல்மெட் அணிந்துகொண்டு தான் இருக்கிறேன். எனக்கு தூசி அலர்ஜி இருப்பது தான் காரணம். ஒருநாள் போடாமல் சென்னையை வலம்வந்தால், வீட்டிற்கு போகும் பொழுது தும்மலோடு தான் போவேன்.


பல வருடங்களாக என்னோடு இந்த ஹெல்மெட் பயணிக்கிறது. அதற்கு மிகவும் வயசாகிவிட்டது. நிறைய கீறல்கள். கண்ணாடியிலும் நிறைய கீறல்கள். தாடைக்கு கீழே போடுகிற பெல்ட் வேலை செய்யவில்லை. புது ஹெல்மெட் வாங்கிவிடவேண்டியது தான். ஆனால் இந்த ஹெல்மெட் இருக்கிறவரை புதுசு வாங்குவதற்கு மனதில்லை.

அண்ணாநகர் பார்க்கில் வண்டியை நிறுத்தினேன். எப்பொழுதும் ஹெல்மெட்டுக்கு போடும் அந்த லாக்கை போடவில்லை. கடைசியாய் ஒருமுறை ஹெல்மெட்டை பார்த்துக்கொண்டேன். கண்ணாடியின் மேல் வைத்துவிட்டு உள்ளே போனேன்.

இரண்டு மணி நேரம். வெளியே வந்து பார்க்கும் பொழுது, ஹெல்மெட் அங்கில்லை. நானே வேண்டாமென்று நினைத்ததால், வெறுப்பில் அதுவே காணாமல் போய்விட்டதோ!

நிறைய யோசனைகள் வந்துகொண்டே இருந்தது.

0 பின்னூட்டங்கள்: