”உலகத்திலே எத்தனையோ பொண்ணுங்க இருந்தும், நான் ஏன் ஜெஸ்ஸியை காதலிச்சேன்?” – அப்படி ஒரு ஜெஸ்ஸியை பத்திய படம்!
கதை. நிறைபோதையில் மெட்ரோ ரயிலில் தவறி விழப்போனவளை நாயகன் காப்பாற்றுகிறான். ரயிலில் அவள் செய்யும் கலாட்டாவிற்கெல்லாம் தற்செயலாய் பொறுப்பாகிறான்.
அதன்பிறகு திட்டமிட்டோ, திட்டமிடாமலோ அடிக்கடி சந்திக்கிறார்கள். அதட்டுகிறாள். உருட்டுகிறாள். பாடாய்படுத்துகிறாள். அவள் இருந்தாலும் தொல்லை. இல்லாவிட்டாலும் தொல்லையாக இருக்கிறது. மெல்ல மெல்ல காதலிக்க துவங்குகிறான்.
அவளுக்கோ தான் இறந்துபோன காதலனை மறக்க இவனிடம் பழகுகிறாள். பின்பு பிரிகிறார்கள். இணைந்தார்களா என்பதை உணர்வுபூர்வமாக சொல்லியிருக்கிறார்கள்.
*****
படத்தின் பிரதான பாத்திரங்கள் இரண்டு. நாயகன், நாயகியைச் சுற்றி சுற்றித்தான் கதை நகர்கிறது. அத்தனை அட்டகாசங்கள் செய்தாலும் அவளைப் பிடித்துபோய்விடுகிறது. அத்தனையையும் பொறுத்துக்கொள்வதால் அவனையும் பிடித்துவிடுகிறது. 100% வெறுப்பு. 200% அன்பு. அது தான் காதல் என ஒருவர் எழுதியிருந்தார். அசைப்போட்டு பார்த்தால் உண்மை தான்.
உண்மைக் கதையிலிருந்து உருவாக்கிய படம் என்கிறார்கள். தென்கொரியாவில் பெரும் பெற்றி பெற்று, உலகம் முழுவதும் வேறு வேறு பெயர்களில் சுற்றி வந்திருக்கிறது. இந்தியில் எடுத்திருக்கிறார்கள். தமிழில் கூட இந்தப் படத்தில் இருந்து சில காட்சிகளை சுட்டு இருக்கிறார்கள்.
நல்ல படம். பாருங்கள்.
0 பின்னூட்டங்கள்:
Post a Comment