கதை. நாயகன் உளவுத்துறையில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றவர். நடுத்தர வயதைக் கடந்தவர். குடும்பம் இல்லை. தனியனாக வாழ்கிறார். இப்பொழுது பெருநகரத்தில் வாடகை கார் ஓட்டிக்கொண்டிருக்கிறார். தன்னைச் சுற்றி உள்ளவர்களுக்கு முதல் பாகம் போலவே இதிலும் உதவுகிறார்.
தன்னுடன் பணிபுரிந்து இப்பொழுதும் வேலை செய்துகொண்டிருக்கும் தன் தோழியை ஒரு கும்பல் கொல்கிறது. சுற்றி உள்ளவர்களுக்கே உதவுகிறவர் தன் ஒரே பிரியமான தோழியை கொல்பவர்களை சும்மா விடுவரா? கொலையைப் பற்றி துப்பறிந்து, கொலைகாரர்கள் யார் என அறியும் பொழுது அதிர்ச்சியாகிறார்.
பிறகு என்ன ஆனது என்பதை பரபரவென ஆக்சன் காட்சிகளுடன் சொல்கிறார்கள்.
*****
டென்சில் வாசிங்டன் (Denzel Washington) நிதானமான நடிப்பு பிடித்திருக்கிறது. அந்த கடற்கரை பிரதேசத்தில் புயலும், மழையும் அந்த பகுதியில் களேபர படுத்திக்கொண்டிருக்கிறது. அதில் இறுதிகாட்சிகள் வைத்திருக்கிறார்கள். சுவாரசியம்.
முதல் படம் அளவிற்கு விறுவிறுப்பு இல்லையென்றாலும், மோசமில்லை. பார்க்கலாம்.
0 பின்னூட்டங்கள்:
Post a Comment