கதை. அமெரிக்காவின் வேறு வேறு பகுதிகளில் தான்தோன்றித்தனமாக வாழும் நான்கு பேர். நால்வருக்கும் மேஜிக்கில் தனித்திறமைகள் இருக்கிறது. சில்லறை திருட்டுகளில் வாழ்க்கையை ஓட்டுகிறார்கள். இந்த நால்வரையும் ஒரு ஆள் ஒருங்கிணைக்கிறார்.
ஒரு வருடத்திற்கு பிறகு, மூன்று மேஜிக் ஷோவை நடத்துகிறார்கள். ஒரு காட்சியில் பலரும் கூடியிருக்க ஒரு வங்கியை ‘கொள்ளையடிக்கிறார்கள்’. இன்னொரு காட்சியில் ஒரு இன்சூரன்ஸ் முதலாளியை திவலாக்குகிறார்கள். அமெரிக்க போலீசு அவர்களை விடாமல் துரத்துகிறது.
இறுதியில் போலீசில் சிக்கினார்களா? இதையெல்லாம் பின்னிருந்து இயக்கியது யார்? ஏன் செய்தார்கள் என்பதை ஒரு கதையை சொல்லி முடிக்கிறார்கள்.
****
படம் துவங்கியதிலிருந்து இறுதிவரை தம் அடிக்க கூட யாரும் வெளியே போய்விடக்கூடாது என்ற முடிவில் திரைக்கதை எழுதியிருக்கிறார்கள். படம் ரோலர் கோஸ்ட் போல ஓடிக்கொண்டிருக்கிறது. படத்தில் மேஜிக் செய்ததாய் சொல்கிறார்கள். பல சமயங்களில் மாயாஜாலமாய் தான் இருக்கிறது. எதை எப்படி செய்தார்கள் என்பதையெல்லாம் படம் முடிந்து ஆற அமர நாம் சிந்தித்துக்கொள்ள வேண்டியது தான்
படத்தில் நடித்த அனைவருமே நன்றாக செய்திருக்கிறார்கள். எனக்கு தெரிந்தவர் ஹல்க்காக நடித்தவர் போலீசாக வருகிறார். இந்தப் படத்தின் வெற்றியில் 2016ல் இரண்டாம் பாகமும் எடுத்து வெற்றி பெற்றிருக்கிறார்கள். இப்பொழுது மூன்றாம் பாகமும் எடுத்துக்கொண்டிருக்கிறார்களாம் கல்லா கட்டும் வரை எடுத்துக்கொண்டுத்தான் இருப்பார்கள்.
முன்பு ஒருமுறை முதல்பாகம் பார்க்காமல், இரண்டாவது பாகத்தை மட்டும் பார்த்த்தில் கொஞ்சம் தலை சுற்றித்தான் போனேன். முதல்பாகம் பார்த்தபிறகு தான், இரண்டாம் பாகம் புரிந்தது.
மேஜிக், சண்டை பிரியர்களுக்கு மிகவும் பிடிக்கும். பாருங்கள்.
“The closer you think you are, the less you'll actually see.”
0 பின்னூட்டங்கள்:
Post a Comment