> குருத்து: The Handmaiden (2016) - தென்கொரியா – ஒரு நல்ல திரில்லர்

May 27, 2021

The Handmaiden (2016) - தென்கொரியா – ஒரு நல்ல திரில்லர்


1930 களில் ஜப்பான் ஆக்கிரமித்துள்ள கொரியாவில் நடக்கும் கதை. அரண்மனை போல வீடு. பணக்கார ஜப்பானியர்களை சிலரை வரவழைத்து உணர்ச்சிப் பொங்க காம கதைகள் சொல்லி உசுப்பேத்திவிட்டு பொருட்களை ஏலம் விட்டு சம்பாதிக்கிறான் நாயகியின் மாமா. கதை சொல்லியாக இருக்கிறாள் நாயகி. நாயகிக்கு ஓவியம் கற்றுத்தருகிறான் ஒருவன். நாயகியை திருமணம் செய்து, சொத்துக்களை அடையும் நோக்கத்துடன் அதற்கு உதவி செய்ய தனக்கு தெரிந்த ஒரு பிக்பாக்கெட் பெண்ணை அந்த வீட்டிற்கு பணிப்பெண்ணாய் வரவழைக்கிறான்.


இவர்கள் நால்வருக்குள் நடக்கும் நிகழ்வுகளும், அசத்தலான திருப்பங்களும் தான் முழு கதையும்!

****

நல்ல திரில்லர். ஒருவரின் மீதான அன்பு எத்தனை மாற்றங்களை செய்யும் என்பதை
அருமையாக
சொல்லியிருக்கிறார்கள்.

இரு பெண்களும் அசத்தியிருக்கிறார்கள். படம் மூன்று அத்தியாயங்களை கொண்டது. மெல்ல நகரும் முதல் அத்தியாயத்தை மட்டும் கொஞ்சம் கொட்டாவிவிட்டு பொறுத்துக்கொண்டு கடந்துவிட்டால் மற்ற இரண்டு அத்தியாயங்களும் விறுவிறுவென சென்றுவிடும்.

2002ல் வெளிவந்த ’பிங்கர் ஸ்மித்’ நாவலின் சாரத்தை எடுத்துக்கொண்டு, கொரிய சூழ்நிலைக்கு
அருமையாக
பொருத்தி எடுத்தியிருக்கிறார்கள். Old Boy, Sympathy of Vengeance, Lady vengeance, Thirst படங்களின் இயக்குநரும் இவர் தானாம். படம் பல விருதுகளையும் பெற்றிருக்கிறது. வசூலிலும் வென்றிருக்கிறது.

படத்தில் பாலியல் காட்சிகள் சில இருக்கின்றன. 18+

நல்ல படம். பாருங்கள்.

0 பின்னூட்டங்கள்: